Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு, சஜித் பிரேமதாஸவிற்கு சவால்


கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தேரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்கள் தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றிற்கு வருமாறு சஜித் பிரேமதாஸவிற்கு மீண்டும் சவால் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.