பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற நியூசி. அமைச்சர்
நியூசிலாந்தின் மகளிர்நலத் துறை அமைச்சர் ஜூலி ஜென்டர், தனது முதல் பிரசவத்திற்கு சைக்கிளில் ஒக்லாந்து சிட்டி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

38 வயது ஜென்டர், நியூசிலாந்தின் போக்குவரத்து அமைச்சில் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

பிரபல சைக்கிளோட்ட ஆர்வலரான அவர், காரில் போதிய இடம் இல்லாததால் சைக்கிளில் செல்ல முடிவெடுத்ததாய்க் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் கணவருடன் மேற்கொண்ட சைக்கிள் பயணம் இனிமையாக இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஜென்டர், அதுதொடர்பான புகைப்படங்களையும் இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவேற்றினார்.

ஜூன் மாதம், நியூசிலந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டனும் அதே மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றார்.