Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பெசிலை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரிக்கை ..


பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை உடனடியாகபொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டு எதிரணியின் எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து, எதிரணியின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ள நிலையில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.


அடுத்து ஜனாபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக எண்ணம் இருந்தால் உடனடியாக பசில் ராஜபக்ஷவை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியினர் சில கூறிய போது, பொதுவேட்பாளர் யார் என்பதை அவசரமாக அறிவிக்க வேண்டிய தேவை தற்போது கிடையாது என மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.