Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அமெரிக்காவில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி, 6 பேர் காயம்


அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 6 பொலிஸார் படுகாயமடைந்த நிலையில், மேலுமொரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது அந்நாட்டில் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள புளோரன்ஸ் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு வழக்கு விசாரணை தொடர்பாக பிடியாணை வழங்க பொலிஸார் அங்கு சென்ற போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் இருந்தவாறு மர்ம நபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சுடு நடத்தினார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் 3 பொலிஸார் முதலில் கொல்லப்பட்டனர். பின்னர் குறித்த மர்ம நபர், குழந்தைகள் சிலரை பினைக் கைதிகளாக வீட்டிற்குள் பிடித்து வைத்து வைத்துக்கொணடார். குழந்தைகளை மீட்க முயற்சித்த பொலிஸாரை நோக்கி மீண்டும் துப்பாக்கியால் சுட்டதில் மேலும், 4 பொலிஸார் படுகாயமடைந்தனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டின் இறுதியில் மர்ம நபரை சுற்றி வளைத்து பொலிஸார் கைது செய்தனர். எனினும் அந்த நபரை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை மற்றும் எதற்காக பொலிஸாரை நோக்கி அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் ? என்ற விவரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த 7 பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழ்ந்த நிலையில் மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Share