Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தடுத்து வைக்கப்பட்டுள்ள இன்டர்போல் தலைவர் அதிரடி இராஜினாமா


சீனாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இன்டர்போலின் தலைவர் மெங் ஹொங்வேயை தாமே தடுத்து வைத்துள்ளதாக சீனா உறுதி செய்துள்ளது.


நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டு வருவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பிரான்ஸிலிருந்து சீனாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்ட இன்டர்போல் தலைவரும் சீனாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சருமான மேங் காணாமல் போனதாக அவரது மனைவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.


இதேவேளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தலைமைப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமாக் கடிதத்தை தாம் பெற்றுக் கொண்டுள்ளதாக இன்டர்போல் தெரிவிக்கின்றது.