Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உணவில்அஜினமோட்டோ பாவிப்பதால் ஏட்படும் விபரிதம் அறிவீர்களா?

அஜினமோட்டோ(ஒரு வகை கடற்பாசி) எனப்படும் மோனோசோடியம் குளுட்டமேட்-ஒரு உண்மை கதை

இது உப்பு அல்ல. ஒரு வகை கடற்பாசி. தொடக்க காலத்திலிருந்து சீனர்கள் கடற்பாசிகளை உணவில் சேர்த்து வந்தார்கள் (நம்ம கறிவேப்பிலை பயன்படுத்துவது போல). அதன் சுவை வித்தியாசமன முறையில் இருந்துவந்தது.

லாமிநேரிய ஜபொனிக (Laminaria Japonica) என்று பெயரிடப்பட்ட இந்த கடற்பாசியை ஆராய்ச்சி செய்த ஜப்பானிய பேராசிரியர் கிகுனே இகேட (Kikunae Ikeda) என்பவர், 1908-ல் கடற்பாசியிலிருந்து தனிசுவை கிடைக்க மோனோசோடியம் குளுட்டமேட் என்ற வேதிப்பொருள்தான் காரணம் என்பதை கண்டறிந்தார். தொடர் ஆய்வுகள் மூலம் குளுட்டாமேட்டை கடற்பாசியிலிருந்து தனியாக பிரித்தெடுத்து 1909-ல் அஜினமோட்டோ (aji-no-moto) என்ற நிறுவனத்தை தொடங்கிவிட்டார்ந்த அஜினமோட்டோ அல்லருது MSG என்றால் என்ன தான் சார்? அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் தன்மை கொண்டதா? 1909-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த அஜினமோட்டோ கார்ப் என்ற நிறுவனம் உருவாக்கியது தான் அஜினமோட்டோ. உணவின் சுவையைக் கூட்டுவதற்காகவே இந்நிறுவனம் அஜினமோட்டோவைக் கண்டு பிடித்தது. மிகவும் குறைவான விலையில், அற்புதமான சுவையை கொடுத்ததால் பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அஜினமோட்டோ மாறியது. அனைத்து விதமான ரெடிமேட் உணவுகளிலும் நல்ல விளைவை அஜினமோட்டோ ஏற்படுத்தி இருந்தது. நாளடைவில் அஜினமோட்டோவின் தாக்கம் கடல்களையும், எல்லைகளையும் கடந்து சென்று விட்டது.

தலைவலி
அஜினமோட்டோவினால் ஏற்படக் கூடிய சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக தலைவலி உள்ளது. தீவிரமான தலைவலிக்கு காரணமாக இருக்கும் தலைவலிகளை அஜினமோட்டோ ஏற்படுத்தும். இது தலைவலியை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்த நிலையை அடிக்கடி அனுபவிக்கச் செய்து விடும்.

நரம்பு பாதிப்பு
திரும்பத் திரும்ப அஜினமோட்டோவை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மரத்துப் போதல், கூச்சம் அல்லது எரிச்சல் போன்ற உணர்வுகள் வருவதற்கு அஜினமோட்டோ காரணமாக இருக்கும். இதைச் சாப்பிடுபவர்களுக்கு அயர்சியும், சோர்வும் ஏற்படும். புர்கின்ஸன் நோய், அல்ஸீமர்ஸ், ஹன்டிங்டன் மற்றும் மல்ட்டிபில் ஸ்லெரோசிஸ் ஆகிய நியூரோடிஜெனரேட்டிவ் நோய்களுக்கும் கூட அஜினமோட்டோவுடன் தொடர்பு உள்ளது.

இதயம்
அஜினமோட்டோ இதயத்தையும் விட்டு வைக்கவில்லை. அஜினமோட்டோவை சாப்பிடுவதன் மூலம் இதயத்தில் படபடப்பு ஏற்படவும், இதயப் பகுதியில் வலி ஏற்படவும் மற்றும் இதயம் அடைத்துக் கொள்ளவும் கூடும்.

பெண்களுக்கு மலட்டுத்தன்மை
அஜினமோட்டோவுடன் தொடர்புள்ள பிரச்சனைகளில் ஒன்றாக பெண்களின் மலட்டுத்தன்மை உள்ளது. அதுவும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்றாக அஜினமோட்டோவும் உள்ளது. மேலும், MSG கலந்துள்ள அனைத்து உணவுகளிலுமே, அவை குழந்தைகளுக்கு ஏற்றவை அல்ல என்று போடப்பட்டிருக்கும். இந்த எச்சரிக்கை வாசகத்தை எந்தவித காரணங்களுக்காகவும் போடாமல் தவிர்க்கக் கூடாது.

பிற விளைவுகள்
அஜினமோட்டோவினால் உயர் இரத்த அழுத்தம், அடிவயிற்றில் பிரச்சனைகள், தைராய்டு செயல்பாட்டில் குறைபாடுகள், டை-2 நீரிழிவு நோய், உடற்பருமன், ஆஸ்துமா, ஹார்மோன் சமநிலையற்ற நிலை, மன இறுக்கம், சாப்பாடு அலர்ஜியாதல் மற்றும் கண்களின் விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. சுவையை மனதில் வைத்துக் கொண்டு மிகவும் அதிக விலை கொடுத்து பிரச்சனையை விலைக்கு வாங்க வேண்டாமே சார்!

குறிப்பு
முன்பே குறிப்பிட்டபடி, அஜினமோட்டோவின் விளைவுகளைப் பற்றி உலகெங்கிலும் பேசியுள்ளார்கள். எனினும், இது குறித்து தெளிவான கருத்துக்கள் வெளிவர மறுக்கின்றன. ஏனெனில், அஜினமோட்டோ தொழில் மிகவும் பரந்துபட்டது. இந்த விளைவுகள் உறுதியானவை என்று சொல்லப்பட்டால், எண்ணற்ற ரெஸ்டாரெண்ட்களையும், உணவகங்களையும் மூட வேண்டியது தான். குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில பெரிய உணவு தயாரிப்பு நிறுவனங்களில் அஜினமோட்டோவை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்கள். அஜினமோட்டோவைப் பற்றிய கருத்துக்கள் இன்றளவிலும் தெளிவாக இல்லாவிட்டாலும், அவற்றை யாராலும் மறுக்க முடியாது. இந்த எண்ணங்கள் கருத்துக்கள் அனைத்துமே ஆதாரமற்றவை என்றும் சொல்ல முடியாது..