Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தொடர் கொலைகள்: ஈராக்கில் மற்றொரு அழகிக்கு மிரட்டல்




ஈராக் நாட்டு அழகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமக்கும் கொலை மிரட்டல் வருவதாக அந்நாட்டு முன்னாள் அழகி ஒருவர் குறிப்பட்டுள்ளார்.

தான் உயிர் பயத்தில் இருப்பதாக ஷிமா கஸ்ஸம் என்ற அந்த அழகி நேரடி இணைய வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தான் அடுத்த இலக்கு என்று கூறி செய்தி ஒன்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டகிராம் சமூகதளத்தில் 2.8 மில்லினர் பயனர்களை கொண்ட டாரா பாரிஸ் என்ற அழகி பக்தாத் நகரில் இனந்தெரியாதவர்களால் கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.





பஸ்ரா நகரில் பெண் உரிமை செயற்பாட்டாளரான சவுத் அல் அலி சுட்டுக்கொல்லப்பட்டு இரண்டு தினங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

அதேபோன்று கடந்த ஓகஸ்ட் மாதம் அழகுக்கலை நிலையங்களின்் உரிமையாளர்களான ரபீப் அல் யசெரி மற்றும் ரஷா அல் ஹஸன் ஆகிய இருவரும் ஒருவார இடைவெளியில் தமது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்தக் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்த பிரதமர் ஹைதர் அல் அபதி உத்தரவிட்டுள்ளார்.