Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ME TOO வைரல் - பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் மீதும் பாலியல் புகார்...!


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மீது இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,


தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள மீ டூ என்ற பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவிக்கும் கருத்துக்களுக்கமையவே அந்தப் பெண் இந்த குற்றச்சாட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்,


1998 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இலங்கை அணி கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டிருந்த போதே அர்ஜுன ரணதுங்க தம்மிடம் அத்துமீறி நடந்தாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்,


எவ்வாறாயினும் இது தொடர்பில் அறிந்துகொள்ள பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை,