Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

110 கி.மீ. வேகத்தில் தீவிர புயலாக கரையை கடந்த கஜா.. வடக்கில் பாடசாலைகளுக்கும் விடுமுறை.

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜ புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது.

இது மேலும் வலுவடைந்து கஜ புயலாக கடந்த 11-ஆம் திகதி உருவெடுத்தது. இப்புயல் வியாழக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

10 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 8-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி, காரைக்காலில் 9-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகப்பட்டினத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. சில இடங்களில் கடல் அலை 2 மீட்டர் உயரம் வரை எழும்பி சீற்றத்துடன்காணப்பட்டது.

110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: நகரும் வேகம் குறைந்ததால் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் புயல் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது. புயல் தீவிரம் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு: புயல் கரையைக் கடந்தாலும் அதன் தீவிரம் 6 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும். இதனை அடுத்து வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நாட்டின் வடக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அந்த பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.