Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

முதலுதவியின் போது நீங்கள் இதையெல்லாம் செய்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும்…! #உஷார்.

பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்கும் மற்ற உயிரின் மீது ஏதோ ஒரு வகையில் பரிவும், பாசமும், இரக்கமும் இருக்க தான் செய்யும். நமது அருகில் இருக்கும் வேறொருவருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் நாம் அப்படியே விட்டு செல்ல மாட்டோம். அவரை எப்படியாவது அந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்ற நம்மால் இயன்ற உதவிகளை நாம் செய்வோம்.

இதே போன்று தான், ஒருவர் அடிப்பட்டு கிடந்தாலோ அல்லது முதலுதவி வேண்டி இருக்கும் பட்சத்தில் நாம் நிச்சயம் உதவி புரிவோம். ஆனால், நாம் தவறுதலாக ஒரு சிறிய தப்பு செய்து விட்டாலும் அவரது உயிரையே பறித்து விடும். அப்படிப்பட்ட செயல்களை தவிர்பதற்கே இந்த பதிவு.

முதலுதவி- முக்கிய உதவு..! பொதுவாகவே யாராவது உதவி என்று கேட்டால் நாம் அவர்களுக்கு வாரி வழங்கி விடுவோம். உதவிகளில் முக்கிய உதவியாக கருதப்படுவது இந்த முதலுதவி தான். உயிருக்கு போராடும் நிலையில் உள்ளவர்களை சரியான முறையில் முதலுதவி கொடுத்தாலே அவரின் பாதி உயிரை நாம் காப்பாற்றி விடலாம்.

மாரடைப்பு யாருக்கேனும் மாரடைப்போ அல்லது நீந்தும் போது அதிக நீர் குடித்து விட்டு மயக்க நிலையில் சென்றாலோ நாம் நமது வாயை வைத்து அவருக்கு மூச்சை கொடுக்க முயற்சிப்போம். ஆனால், இது முற்றிலும் தவறான ஒன்றாகும். இதற்கு பதிலாக அவர்களின் மார்பு பகுதியில் நன்றாக கையை வைத்து அழுத்தி மூச்சை வெளியேற்ற முயல்வதே சிறந்த முதலுதவி.வலிப்பு வந்தால்…? நம்மில் பலர் செய்யும் மிக பெரிய முதலுதவி தவறு இது தான். யாராவது வலிப்பு ஏற்பட்டால் அவரது வாயில் ஏதேனும் பொருளை வைத்து கடிக்கும்படி செய்வோம். இது அவர்களின் மூளையையே பாதிக்க கூடும். எனவே, இந்த நிலையில் மென்மையான பொருளை அவரது தலைக்கு அடியில் வைக்கவும். வேண்டுமென்றால், ஏதேனும் திடமான பொருளை கையில் கொடுக்கலாம்.

மூக்கில் ரத்தம் வடிதல் நமது அருகில் யாருக்காவது மூக்கில் ரத்தம் வடிந்தால் அவர்களை பின்னோக்கி சாய சொல்வோம். ஆனால், இது தவறான முதலுதவியாகும். மூக்கில் ரத்தம் வடிந்தால் முன்னோக்கி அவர்களை சற்றே குனிய சொல்ல வேண்டும். இந்த நிலையில் விரைவாக ரத்த போக்கு நின்று விடும். பிறகு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம்.

தீ காயங்கள் தீபாவளி இன்னும் சில காலங்களில் நமது வீட்டை அலங்காரம் செய்ய வர போகிறது. இந்த நாட்களில் தீ காயங்கள் ஏற்படுவது இயல்பு தான். எனினும், தீ காயம் ஏற்பட்டால் மருந்து வைப்பதை விட குளிர்ந்த நீரில் 15 நிமிடம் காயம் ஏற்பட்ட பகுதியை வைப்பது சிறந்தது.கார் விபத்து இப்போதெல்லாம் சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகள் எண்ணில் அடங்காமல் செல்கின்றன. எனவே, இதனை பற்றிய புரிதல் நம் அனைவருக்கும் இருப்பது நல்லது. கார் விபத்து ஏற்பட்டு காருக்குள் இருப்பவரை இழுக்கவோ, வெளியில் எடுக்கவோ கூடாது. மாறாக முதலில் காரின் என்ஜினை அணைக்க(off) வேண்டும். மேலும், உடலில் ரத்தம் வடிந்தால் அதனை நிறுத்த முயலுங்கள்

பாம்பு கடியா..? பாம்பு கடித்தால் அந்த இடத்தை நம் பற்களை வைத்து கட்டாயம் கடிக்க கூடாது. இது அவருக்கும், நமக்கும் ஆபத்தை தரும். மாறாக அந்த இடத்திற்கு சிறிது தள்ளி, துணியை வைத்து கட்டி விடவும். பிறகு சோப்பை கொண்டு சுத்தம் செய்யவும். இதன் பிறகு மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்லலாம்.ஷாக் அடித்தால்..? ஷாக் அடிக்கும் சமயத்தில் உதவும் மனப்பான்மை கொண்ட நாம் சட்டென ஓடி போய் அவரை அதிலிருந்து விடுவிக்க முயலுவோம். ஆனால், இது அவரின் உயிருக்கும், உங்களின் உயிருக்கும் ஆபத்தை தந்து விடும். மாறாக முதலில் மெயின் சுவிட்சை அணைத்து விடவும். இல்லையென்றால் அவரை மர கட்டையால் தள்ளி விடவும்.

எதையாவதை முழுங்கி விட்டார்களா..? பெரும்பாலும் ,குழந்தைகள் தான் இது போன்ற தவறுகளை செய்வார்கள். வாயில் எதையாவது வைத்து விளையாடி கொண்டிருப்பார்கள். தவறுதலாக அதனை முழுங்கி விட்டால் முன்னோக்கி குழந்தையை சிறிது குனிய செய்து முதுகில் அழுத்தமாக தட்டி கொடுக்க வேண்டும். அப்போதுதான், மூச்சு குழாய் இலகுவாகி முழுங்கிய பொருள் வெளியே வர இயலும்.

மயங்கி விழுந்தால்..? யாராவது மயங்கி விழுந்தால் அப்போது தான் நாம் அவசரத்தில் பல தவறான முதலுதவிகளை செய்வோம். மயங்கி விழுந்தவருக்கு சோடா அல்லது தண்ணீரை கொடுக்க கூடாது. இது அவர்களின் சுவாச குழாயை அடைத்து விடும். இதற்கு பதிலாக அவரை இடது அல்லது வலது புறமாக திருப்பி படுக்க செய்து முதுகில் சிறிது தட்டி விடலாம். அவர் எழுந்த பிறகு தண்ணீரை அவருக்கு கொடுக்கலாம்மீன் கடித்து விட்டதா..? கடற்கரைக்கு செல்லும்போது ஏதேனும் மீன் உங்களை கடித்து விட்டால் விஷயம் ஏறி விட கூடாது என அந்த இடத்தை தள்ளி கட்டு போடாதீர்கள். மாறாக, கடிபட்ட இடத்தில் துணியை வைத்து ரத்தம் வெளிவராத படி செய்வது மிக சிறந்த முதலுதவியாகும் சுளுக்கு உள்ளதா..? யாருக்காவது சுளுக்கு ஏற்பட்டால் உடனே அவருக்கு சுடு தண்ணீரால் முதலுதவி கொடுக்காதீர்கள். சுளுக்கு ஏற்பட்டால் ஐஸ் கட்டியை வைத்து அந்த இடத்தில் ஒத்தடம் கொடுப்பதே மிக சிறந்த முதலுதவி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஜாக்கிரதை நண்பர்களே..! பிறகுக்கு செய்யும் உதவியில் நம்மால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்க வேண்டும். முதலுதவியை சரியான முறையில் அணுகினாலே பாதிக்கப்பட்டவரை எளிதில் காப்பாற்றி விடலாம். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.