Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ரஷ்ய அழகியுடன் திருமணம்: முடிதுறந்தார் மலேசிய மன்னர்





மலேசிய மன்னர், சுல்தான் ஐந்தாவது முஹமது வரலாற்றில் முதல்முறையாக எதிர்பாரா வகையில் முடிதுறந்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் இருந்து விடுதலை பெற்றது தொடக்கம் எந்த ஒரு மலேசிய மன்னரும் முடிதுறந்ததில்லை. இந்நிலையில் மன்னரின் பதவி விலகலுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் அவரது இராஜினாமா உடன் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

49 வயதான சுல்தான் ஐந்தாம் முஹமது ரஷ்ய அழகி ஒருவரை திருமணம் முடித்தது குறித்த செய்திகள் பரவி வரும் நிலையிலேயே அவரது இராஜினாமா இடம்பெற்றுள்ளது.





மருத்துவ விடுமுறையில் கடந்த நவம்பரில் மன்னர் வெளிநாடு சென்ற நிலையில், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில், மொஸ்கோ அழகியை அவர் திருமணம் புரியும் புகைப்படம் ஒன்று வெளியானது.

இந்த செய்தி குறித்து அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

மலேசியாவின் தனித்துவமான சுழற்சி முறையின் அடிப்படையில், ஒன்பது அரச குடும்பங்களைச் சேர்ந்தோர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாமன்னராக நியமிக்கப்படுவர்.

0 Comments:

Post a Comment