Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்




இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.

வடக்கு காசாவில் இருக்கும் இராணுவ தளம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் அஷ்கலோன் நகர் மீது ஞாயிறு இரவு இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலை தொடர்ந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த ரொக்கெட் குண்டு இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவங்களில் இரு தரப்பிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.





இஸ்ரேல் மற்றும் காசா இடையில் மற்றொரு பாரிய மோதல் ஒன்றை தூண்டும் வகையில் பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு மாதங்களிலேயே மீண்டும் இந்த மோதல் வெடித்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மூன்று பாரிய யுத்தங்களில் ஈடுபட்டுள்ளன.

ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசாவில் இருந்து நடத்தப்படும் ரொக்கெட் தாக்குதல்களுக்கு அந்த அமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது.

0 Comments:

Post a Comment