Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பெற்றோர்களின் கவனத்திற்கு

பிள்ளைகள் ஆசிரியர்களை மதிக்க கற்றுக் கொடுங்கள்.
பாடசாலைகள் இன்று குழப்பம் நிறைந்த சூழலாக மாறிக் கொண்டிருக்கின்றன.
மாணவர்கள் எவ்வித ஐயமுமின்றி ஆசான்கள் முன்னிலையிலேயே துணிவுடன் தவறு செய்வதைக் காணலாம்
இத்தகு நிலமையை சீராக்கி பண்பாடுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்ப பெற்றோர் கருத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்கள் கீழ்வருமாறு.
1. உங்கள் பிள்ளை கற்கும் பாடசாலை பற்றி நல்ல விதமாக வீட்டில் பேசுங்கள்.
2. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றி நேர்மனப்பாங்கை ஏற்படுத்துங்கள்.
3. பிள்ளைகளின் புத்தகப்பை மற்றும் கொப்பிகளை தினமும் பாருங்கள்.
4. உங்கள் பிள்ளை பாடசாலை விட்டு வந்ததுமே சகபாடிகள் ஆசிரியர்கள் பற்றி கூறும் எதிர்மறையான கருத்துக்களை உடனடியாக நம்பாதீர்கள்.
5. என் பிள்ளை சொல்வது உண்மை தான் என்று பிள்ளை முன்னிலையிலேயே கூறி அவர்கள் பல தவறுகளை செய்து அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள இடமளிக்காதீர்கள்.
6. பிள்ளைகள் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவாகக் கதைக்கும் போது பக்குவமாகவே அவ்வாறு கதைக்கக் கூடாதென்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
7. உங்கள் பிள்ளைக்கு ஆசிரியர் ஒருவர் தண்டனை வழங்கியதாக அறிந்தால் அது பற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியருடனே கதைத்து சுமுகமான முறையில் பிரச்சினையைத் தீருங்கள்.
8 வீட்டில் நீங்கள் உங்கள் பிள்ளையின் பாடசாலை மற்றும் ஆசிரியர்களைப் பற்றி நல்ல விதமாகவே கதையுங்கள்.
9. ஆசிரியர்கள் என்போர் ஆக்கக் கூடியவர்களே அன்றி அழிக்கக் கூடியவர்களல்ல என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள்.
10. ஆசிரியர்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் விதமாக நடக்க உங்கள் பிள்ளைகளுக்கு அனுபவம் மூலமும் செயல் மூலமும் காட்டுங்கள்.
11. எந்தக் காரணம் கொண்டும் மாணவர் முன்னிலையில் ஆசிரியரை தண்டிக்கவோ, கண்டிக்கவோ முயலாதீர்கள் அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை மிகவும் மோசமாக பாதித்துவிடும்.
FA.

0 Comments:

Post a Comment