Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கால்கள் பலம் பெற்று நடக்கக்கிடைத்த மனிதர்களே !

உங்கள் கால்கள் பலமிழந்து நடக்கத் திராணியற்று நாட்கணக்கில்,
மாதங்கள் வருடங்களாக ஒரு
இடத்தில் நீங்கள் அமர்ந்திருப்பதாக
ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருநாள் ஒரு இடத்தில் இருப்பதை
விடுங்கள்.ஒரு கணம் கற்பனை
செய்ய முடிகிறதா உங்களால் ?.
ஆனால் அப்படியும் மனிதர்கள்
இருக்கிறார்கள்.அவர்களது
அன்றாட வாழ்க்கையை,
தேவைகளை நினைத்துப்பாருங்கள்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு
வந்தால் தான் தெரியும் என்பர்.

முழுநாளும் ஒரு இடத்தில்
முடங்கிக்கிடக்கின்ற வலியின்
வலி  உங்களுக்குப் புரிகிறதா ?
உங்களுக்குப் புரிந்ததோ இல்லையோ,
பொரல்லை ஜும்மாப்பள்ளி
நிர்வாகத்துக்குப் புரிந்திருக்கிறது.
தனவந்தர்களிடமிருந்து சக்கர
நாற்காலிகளைப் பெற்று,வறிய
குடும்பத்திலுள்ள நடக்க முடியாவர்
களுக்கு வழங்குகிறார்கள்.

வைத்தியர்,கிராமசேவகர்,ஊர்ப்பள்ளி
நிர்வாகி ஆகியோரது தனித்தனி
கடிதங்களுடன் சக்கரநாற்காலி
தேவைப்படுகிறவரது புகைப்படம்,
அவரது தேசிய அடையாள
அட்டையின் பிரதி ஆகியவற்றுடன்,
இல:110 boralla cross Road யில்
உள்ள boralla jumma masjid க்குச்
சென்றால் ( wheelchair )
சக்கரநாற்காலியொன்றைப்
பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு:0777885224
Rikas haji.

ஏழைகளுக்கு மிகவும் பயனுடைய
இப்பணியை  வசதியுடையவர்கள்
வாழும் பகுதிகளிலுள்ள இதர
பள்ளிகளும் செய்ய முயற்சித்தால்
நன்மையுடையதாகவே இருக்கும்.

0 Comments:

Post a Comment