Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வெறும் `நூறு ரூபாய் போதும்!' - சென்னை மெட்ரோவில் நாள் முழுக்க சுற்றலாம்

சென்னையின் புதிய அடையாளமாக மாறி வருகிறது, மெட்ரோ ரயில். ஆனால், அதிகக்கட்டணம் பயணிகளை அதிருப்தியடைய வைக்கிறது. இதைச் சரிகட்டும் நோக்கில், சில சலுகைகளை அளித்து வருகிறது மெட்ரோ நிர்வாகம். அதில் ஒன்றுதான், டெய்லி பாஸ்.











மாநகராட்சிப் பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் டெய்லி பாஸ் போன்றதே, இதுவும். இந்த டெய்லி பாஸை, மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் 150 ரூபாய் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பாஸின் மூலம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். பயணம் முடிந்ததும், அந்த டெய்லி பாஸை ரயில் நிலைய கவுன்டரில் ஒப்படைத்தால், 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும். ஆக, வெறும் 100 ரூபாய் கட்டணத்தில், மெட்ரோவில் ஆசைதீர பயணித்து மகிழலாம். முக்கியமாக, சென்னையைச் சுற்றிப்பார்க்க வரும் வெளியூர்க்காரர்களுக்கு, டெய்லி பாஸ் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.




மேலும், டெய்லி பாஸை வாங்கிய நபரே தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கூட அதைப் பயன்படுத்தி பயணிக்கலாம். இதுவே மாநகராட்சி பேருந்துகளில், டெய்லி பாஸை வாங்கியவர்கள் மட்டுமே, அதைப் பயன்படுத்த முடியும். ஆனால், மெட்ரோவில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

0 Comments:

Post a Comment