ரஷ்ய உளவு திமிங்கிலம் நோர்வேயில் கண்டுபிடிப்பு




நார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நோர்வே நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில் இருந்த அடையாளம் ஒன்று அது ரஷ்யாவை சேர்ந்தது என்பதைக் காட்டுவதாகவும் கடல் உயிரியலாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற அந்த வல்லுநர் கூறியுள்ளார். நோர்வே நாட்டு மீனவர் ஒருவர் அந்த சேனத்தை திமிங்கிலத்தில் இருந்து கழற்றினார்.

ரஷ்யாவுக்கு அந்தப் பிராந்தியத்தில் கடற்படை தளம் ஒன்று உள்ளது.





இங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையில் இருந்து புறப்படும் நார்வே நாட்டு படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த திமிங்கிலம் பல முறை அணுகியுள்ளது. இந்த இடம், ரஷ்யாவின் வடதிசை கடற்படைத் தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெலுௗகா வகை திமிங்கிலங்கள் ஆர்க்டிக் கடலை தாயகமாகக் கொண்டவையாகும்.

0 Comments:

Post a Comment