அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ளது ஃபானி: சென்னை வானிலை மையம் - WeligamaNews

Breaking

Post Top Ad

Tuesday, April 30, 2019

அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ளது ஃபானி: சென்னை வானிலை மையம்வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இது ஒடிசாவை நோக்கி செல்லக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் சென்னையிலிருந்து 575 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகக் கூறினார். இந்த புயல், வடமேற்கு திசையில் பயணித்து நாளை மாலை ஒடிசா கடற்கரையை நெருங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புயலால் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த பாலச்சந்திரன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஃபானி புயலால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Bottom Ad

Pages