நிகாப் அணிந்து சென்ற மல்வானை பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். - WeligamaNews

Breaking

Post Top Ad

Friday, May 3, 2019

நிகாப் அணிந்து சென்ற மல்வானை பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (2019.05.03) பியகம, பண்டாரவத்தை பகுதியில் நிகாப் அணிந்து சென்ற மல்வானை பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் இக் காலத்தில் முகம் மூடுவது (நிகாப்/ புர்கா உட்பட) தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இது சட்ட விரோத செயற்பாடாக கருதப்படுகிறது.

அது மட்டுமல்லாது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே எமது முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகள் எமது நாட்டின் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அறிவுரையை ஏற்று நடக்குமாறும் பனிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

-மல்வானை நியூஸ்

Post Bottom Ad

Pages