பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம் - WeligamaNews

Breaking

Post Top Ad

Friday, May 3, 2019

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம்

வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மேலும், இந்த மோதலில் 46 பேர் காயமடைந்தனர்.
இது குறித்துடுவிட்டர் வலைதளத்தில் அந்த நாட்டின் தன்னார்வ அமைப்பான வெனிசூலா சமூக மோதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஜனாதிபதி மதுரோவுக்கு எதிராக தலைநகர் கராகஸில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், ஜிருபித் ரெளஸியோ என்ற 27 வயது பெண்ணுக்கு தலையில் குண்டு பாய்ந்தது. அதையடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த மோதலின்போது 46 பேர் காயமடைந்ததாக மனித உரிமை மற்றும் வைத்திய சேவை அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post Bottom Ad

Pages