சூப்பர் ஓவரில் மூன்றாவது பந்தில் வெற்றி! - WeligamaNews

Breaking

Post Top Ad

Thursday, May 2, 2019

சூப்பர் ஓவரில் மூன்றாவது பந்தில் வெற்றி!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.12 ஆவது ஐ.பி.எல். தொடரில் 51 ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.ஐதராபாத் அணி சார்பில் விரிடிமன் ஷா 25 ஓட்டத்துடனும், குப்டீல் 15 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 3 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 12 ஓட்டத்துடனும் அபிஷேக் சர்மா 2 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 31 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மணீஷ் பாண்டே 71 ஓட்டத்துடனும், ரஷித் கான் எதுவித ஓட்டமின்றியும் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் குர்னல் பாண்டியா, ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் இதையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்படட முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சூப்பர் ஓவரில் 9 ஓட்டங்களை நோக்கிக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி மூன்று பந்துகளை எதிர்கொண்டு வெற்றியிலக்கை கடந்தது (பாண்டியா -7, பொல்லார்ட் - 2)

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

Post Bottom Ad

Pages