தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் 314 ஆசிரியர் வெற்றிடங்கள்

தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் 314 ஆசிரியர்கள் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்டகாலமாக தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவிவந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்யும் முகமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நியமனங்களை இரண்டு மாதகாலத்தினுள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்திதென்னகோன் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டாலும் அதில் சித்தியடைந்த தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கு இதுவரைநியமனம் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்ததின் காரணமாக நீதிமன்றத்தினால் 2016.08.30தொடக்கம் தென் மாகாண தமிழ் மொழி ஆசிரிய நியமனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலைமையினை கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாடிய தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு புதிதாக 314 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. (Thinakaran)
Read more »

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கமல் மீது காலணி வீச்சு


மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Read more »

நோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...?


இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார். அவரது ஜனாஸா நேற்று -14- படையினரின் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.


படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதான பௌஸல் அமீனின் குடும்பம் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவர்களாகவே உள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாத்தாண்டிய கொத்தரமுல்ல பகுதியை சேர்ந்த பௌஸல் அமீன் அப்பிரதேசத்தில் அனைவருக்கும் நன்கு தெரிந்த தளவாடக்கடை உரிமையாளர். அவரது கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பண ரீதியாக உதவிசெய்துவந்த அளவுக்கு பெருந்தன்மையுடைய வர்த்தகர் அவர் என்று அவருடன் தொடர்புடையவர்கள் கூறுகிறார்கள்.


சம்பவம் இடம்பெற்ற அன்று திங்கள் மாலை - 6.20 மணியளவில் - நோன்பு துறந்துவிட்டு பௌசல் தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்த சமயம் தீடீரென்று அப்பிரதேசத்தில் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இளைஞர் குழு பௌசலின் வீட்டு வளவினுள்ளேயும் புகுந்துள்ளார்கள். கற்களை வீசியும் ஜன்னல்களை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். என்ன செய்வதென்று தெரியாது தனது நான்கு குழந்தைகளையும் அணைத்தவாறு தனது மனைவியுடன் வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கிறார் பௌசல்.


அப்போது, வீட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பௌசலின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அதன் கண்ணாடிகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தவர்கள்.


அப்போதுதான், வெளியே ஓடிச்சென்ற பௌசல் தயவுசெய்து வாகனத்தை ஒன்றும் செய்துவிடவேண்டாம் என்றும் தங்களை விட்டுவிடும்படியும் கெஞ்சியிருக்கிறார். அச்சமயம், அவர் மீது பாய்ந்த கும்பல் தாம் கொண்டுவந்த வாளால் சரமாரியாக அவரது கழுத்திலும் முகத்திலும் வெட்டியிருக்கிறது. படுகாயமடைந்த பௌசல் நிலத்தில் விழுந்திருக்கிறார்.


அப்போது அவரது வீட்டு வேலைத்தளத்திலிருந்த turpentine திரவப்பேணியை எடுத்து திறந்து அதிலிருந்து திரவத்தை படுகாயமடைந்து நிலத்தில் விழுந்து கிடந்த பௌசலின் முகத்தில் ஊற்றிவிட்டு அந்தக்கும்பல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறது.


குடும்பத்தினர் உடனடியாக அவரை மாறவில வைத்தியசாலைக்கு கொண்டுசென்றார்கள். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.


தங்களது தந்தையின் இறப்பினை ஜீரணிக்கமுடியாத பௌசலின் நான்கு குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பௌசலின் நான்கு பிள்ளைகளும் ஆறு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. SBS
Read more »

நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பேஸ்புக்

நியூசிலாந்து – கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதன் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதிகள் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டனர்.
இதனையடுத்து, இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீடிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பகிரப்படும் வன்முறை தொடர்பான காணொளிகளைத் தடை செய்வது குறித்து பாரிசில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், பேஸ்புக் அதன் நேரலை விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more »

கொழும்பு திடீர் தீப்பரவலினால் மெனிங் சந்தை பகுதியில் பதற்றம்



கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தை பகுதியில் இடம்பெற்ற திடீர் தீப்பரவலினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

மெனிங் சந்தை பகுதியின் கட்டடமொன்றில் இன்று (15) முற்பகல் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதேவேளை இந்த தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more »

VPN பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை


இலங்கையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட போதும் VPN செயலி பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறிய மூவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களிடம் இலஞ்சம் பெறுவதாகவும், அதனை காட்டி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மாத்தறை பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமகாலத்தில் பேஸ்புக் உட்பட சமூகவலைத்தங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் VPN பயன்படுத்தி இந்த சந்தேக நபர்கள் இந்த தகவலை அனுப்பியுள்ளனர்.

இதன் மூலம் இனங்களுக்கு இடையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கும், பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்துவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 34, 29, 27 வயதுடைய மாத்ததறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VPN பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read more »

ஏறாவூரில் பதற்றம் தற்போது

ஏறாவூர் காளிகோவில் வீதியில் ( காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை இனவாதிகளினால் நாடத்தப்பட்டது.

வீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து பெற்றோல் குண்டு வீசி இருக்கின்றனர் காரை நோக்கி  வீட்டின் உரிமையாளர் எழுந்ததும் இனவாதிகள் தமிழ் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி தப்பி ஓடியுல்லார்கள்-

தற்போது சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுல்லார்கள் -

ஏறாவூரில் எல்லைப்புறங்களில் இருக்கும் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்

Read more »

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!


பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சொலோமன் (Solomon Island) தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகாவில்லை.

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியாவில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்கு
Read more »

சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க, தனியான பொலிஸ் பிரிவு


சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கவென தனியான பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துகளையும் பதிவுகளையும் மேற்கொண்டால், அவசரகால சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


அதேநேரம், சமூக வலைத்தளங்கள் மீதான தடை நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.


இத்துடன் நான்காவது தடவையாக இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்தும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட குறுகிய காலத்துக்கான தற்காலிக முடிவு என்றும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கப்படுமா? என்பது தொடர்பில் தினகரன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கே அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.


"நாட்டு நிலைமை அடிப்படையிலேயே உடனடி அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளோம். அசாதாரண சூழ்நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். கண்டியில் இடம்பெற்ற கலவரத்தின்போது முதற் தடவையும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று தடவைகளுமென இதுவரை நான்கு தடவைகளுக்கு சமூக வலைத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் குறுகிய காலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட தற்காலிகத் தடை," என்றும் அவர் கூறினார்.


அடுத்த கட்டமாக நாட்டின் நிலவரம் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அனைத்து பிரதேசங்களிலும் அமைதியும் சுமுக நிலையும் ஏற்படுமாயின் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் பேஸ்புக் மீதான தடையை அந்நிறுவனம் கண்டித்துள்ளதா? என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது உத்தியோகப்பூர்வமாக எமக்கு அதுபற்றி எதுவும் அறியத்தரப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
Read more »

வாளுடன் வந்து சபைக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பெண் அரசியல்வாதி - காலியில் சம்பவம்

காலியில் பிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் அரசியல்வாதியினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இமதுவ பிரதேச சபை இன்று கூடிய வேளையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகா சஞ்ஜீவனி என்ற பெண் உறுப்பினர் வாள் ஒன்றுடன் உள்நுழைந்தார்.


வாளுடன் உரையாற்ற முயற்சித்த போது, அதற்கு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பெண்களை பாதுகாத்துக்கொள்ள வாள்கள் வைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தனது பாதுகாப்பிற்காக வாளுடன் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.


இந்த சந்தர்ப்பத்தில் சபையில் இருந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.


இதனையடுத்து சபைத் தலைவர் அந்த வாளை பெற்று வெளியில் எடுத்துச் செல்ல பணித்தார். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன.
Read more »