வெலிகம நகரசபை தலைவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்க பண்பாட்டை மீறிய குற்றச்சாட்டில்  வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் ஜயவிக்ரம் வின் கட்சி உறுப்புரிமை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை விமர்சித்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டது தொடர்பிலேயே வெலிகம நகரசபை தலைவர் விஜயவிக்ரம வின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 கடந்த சில நாட்களுக்கு முன் வெலிகம நகரசபை தலைவர் கட்சி தலைமையகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டதாகவும் அதில் அவர் இனிமேல் இவ்வாறு இடம்பெறாது பார்துகொள்வதாகவும் உறுதி அளித்தும் மீண்டும் கட்சி தலைமையை விமர்சித்தது
தொடர்பில் கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுத்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்
Read more »

வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து சென்ற முஸ்லீம் பெண் பாதுகாப்பு படையினரால் கைது

நாடில் புர்கா அணிவது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட நிலையில் வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து ஜனாஸா    வீடொன்றுக்கு சென்ற முஸ்லீம் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து  இலங்கையில் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது இதன் அடிப்படையில் புர்கா தடைசெய்யப்பட்ட நிலையில்  புர்கா அணிந்து செல்வது நாட்டு சட்டத்தை மீறியவராக இந்த பெண் விசாரணைக்கு உற்படுத்த பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் கவர்துறையினரால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ரன.

அகாசர கால நிலையில் நாட்டு சட்டத்தை மீறி செயற்படுவோர் விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வாறான உடையுடன் தடுப்பு காவலில் இருப்பீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுமாறும்
 முஸ்லீம் பெண்கள் நாட்டின் நிலைமையை மறந்து செயற்பட வேண்டாம் எனவும்  இது தொடர்பாக ஆண்கள் பெண்களுக்கு அறிவுறுத்தல்களை வழக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
Read more »

வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி எழுதிய கடிதம் தொடர்பாக
வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் விஜ்ஜயவிக்ரம மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நகரசபை உறுப்பினர்களிடம் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம தெரிவித்துள்ளார்.
    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்தி பதவி விலக வேண்டும் என்றும் தமைப்பதவியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு எதிராக நாட்டில் உள்ள வேறுபகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி நகரசபை உறுப்பினர்கள் வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள். விடுத்துள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

    வெலிகம நகரசபை தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தால்  அவருக்கு எதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
    Read more »

    இலங்கை வன்முறை சம்பவங்களில் 27 பள்ளிவாயல்களுக்கும் 1 அரபுக்கல்லூரிக்கும் சேதம்

      !

    சில தினங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் 27 பள்­ளி­வா­சல்­களும் ஒரு அரபுக் கல்­லூ­ரியும் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

    தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சலின் புள்ளி விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் திரட்­டி­யுள்­ளது குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும், ஒரு அர­புக்­கல்­லூ­ரியும் புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும் கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள் பல­வற்­றுக்கு பலத்த சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. பல பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. பள்ளிவாயல்களில் சிறு நீர் கழித்தும் அசுத்தப்படுத்தியும் உள்ளன.

    குரு­நாகல் மாவட்­டத்தில் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள்

    *மஸ்­ஜிதுல் ஹுதா– கொட்­டாம்­பிட்­டிய

    * மஸ்­ஜிதுல் லுஹ்லு– மல்­வத்த வீதி, கொட்­டாம்­பிட்­டிய

    *மஸ்­ஜிதுல் தாருஸ்­ஸலாம்– நிக்­க­பிட்­டிய

    *மஸ்­ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்­கென

    *-மஸ்­ஜிதுல் ஆலியா– பூவெல்ல

    *மஸ்­ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடி­பொல

    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல்– இஹல கினி­யம – வீர­பொக்­குன

    *அப்ரார் தக்­கியா –இஹல கினி­யம

    *ஆயிஷா தக்­கியா– இஹல கினி­யம

    *மஸ்­ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்­பாவ

    *மஸ்­ஜிதுல் அக்ஸா தக்­கியா– கரன்­தி­பொல

    *ஹம்­மா­லியா தக்­கி­யா–­பொன்­கொல்ல –பண்­டார கொஸ்­வத்த

    *பிர்ருல் வாலிதைன் தக்­கியா– செம்­பேவ சுனந்­த­புர

    *மஸ்­ஜிதுல் இஸ்லாம் –வீதி­ய­வெல –நாகொல்­லா­கொட

    *ஜமா­லியா அரபுக் கல்­லூரி– கொட்­டம்­பிட்­டிய

    *தோர­கொட்­டுவ ஜும்ஆ பள்­ளி­வாசல்– கொன்­னாவ– தோர­கொட்­டுவ

    *சுவைக் தக்­கியா– கொன்­னாவ

    *தக்­கியா –   பென்­னலி கட­வெர –மொர­கோன்ன

    *கைராத் ஜும்ஆ பள்­ளி­வாசல்– யாய­வத்த –கிரிந்­த­வெவ

    *ஹசனாத் தக்­கியா –கல­பிட்­டி­ய­கம– நிக்­க­வ­ரட்­டிய

    *நிக்­க­வ­ரட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் –நிக்­க­வ­ரட்­டிய

    *பென­டிக்­வத்த தக்­கியா– எஹத்­த­முல்ல– நாகொல்­லா­கொட

    *மாபா­கம தக்­கியா –பரம்­பொல– ஹல்­மில்­லா­வெவ

    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் –அச­ன­கொட்­டுவ –குறத்­தி­ஹேன

    புத்­தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள்

    *மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்

    *நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்

    *மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்

    கம்பஹா மாவட்டம்

    *மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்

    Read more »

    இலங்கை இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்

    கடந்த சில நாட்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளன.இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதேவேளை குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ததை வரவேற்பதாகவும், இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இதற்காக சரியான தலைமைத்துவம் அவசியமெனவும் வெறுப்பு, வன்முறைகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read more »

    கையை வைத்ததுமே சொதப்பிய ரிஷாத்தின் பிரேரணை

    கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (16) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு சிறிலங்க சுதந்திர கட்சியின் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பிரேரணைக்கான ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

    றித்த பிரேரணையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 காரணிகள் காணப்பட்டதுடன், 64 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

    இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 ஆகும். இதற்கமைய குறித்த பிரேரணை பெறுமதியற்றதாகும்.

    இதில் என்ன வேடிக்கையான விடயம் என்றால் கையொப்பமிட்ட 64 பேரின் கண்ணுக்கும் இது தெரியாமல் போனதே. இருப்பினும் இதுவும் ஒரு வகையில் நன்மையை அளித்துள்ளது. யார் யாருடைய உண்மையான அரசியல் தன்மை எப்படி என்று நம்மால் பார்வையிட கூடியதாக உள்ளது.

    எமக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் யுத்தம் மேற்கொள்ளவேண்டிய தேவை இல்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெயரில் குற்றம் இருந்தாலும் அதற்க்கு இனி ஒன்றும் செய்ய இயலாது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை வீசிவிடவேண்டியது தான்.

    சிலவேளை இந்த நாட்டின் அரசியல் ஆட்டத்தில் இது தெரிந்தே விடப்பட்ட பிழையாக கூட இருக்கலாம்.

    இத்தகைய நாட்டிற்கு சஹ்ரான் தாக்குதல் நடத்தவில்லை என்றால் தான் புதுமை.< /p>

    Read more »

    தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் 314 ஆசிரியர் வெற்றிடங்கள்

    தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் 314 ஆசிரியர்கள் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
    நீண்டகாலமாக தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவிவந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்யும் முகமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
    இந்நியமனங்களை இரண்டு மாதகாலத்தினுள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்திதென்னகோன் தெரிவித்தார்.
    2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டாலும் அதில் சித்தியடைந்த தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கு இதுவரைநியமனம் வழங்கப்படவில்லை.
    இதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்ததின் காரணமாக நீதிமன்றத்தினால் 2016.08.30தொடக்கம் தென் மாகாண தமிழ் மொழி ஆசிரிய நியமனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலைமையினை கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாடிய தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு புதிதாக 314 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. (Thinakaran)
    Read more »

    தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கமல் மீது காலணி வீச்சு


    மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Read more »

    நோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...?


    இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார். அவரது ஜனாஸா நேற்று -14- படையினரின் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.


    படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதான பௌஸல் அமீனின் குடும்பம் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவர்களாகவே உள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நாத்தாண்டிய கொத்தரமுல்ல பகுதியை சேர்ந்த பௌஸல் அமீன் அப்பிரதேசத்தில் அனைவருக்கும் நன்கு தெரிந்த தளவாடக்கடை உரிமையாளர். அவரது கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பண ரீதியாக உதவிசெய்துவந்த அளவுக்கு பெருந்தன்மையுடைய வர்த்தகர் அவர் என்று அவருடன் தொடர்புடையவர்கள் கூறுகிறார்கள்.


    சம்பவம் இடம்பெற்ற அன்று திங்கள் மாலை - 6.20 மணியளவில் - நோன்பு துறந்துவிட்டு பௌசல் தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்த சமயம் தீடீரென்று அப்பிரதேசத்தில் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இளைஞர் குழு பௌசலின் வீட்டு வளவினுள்ளேயும் புகுந்துள்ளார்கள். கற்களை வீசியும் ஜன்னல்களை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். என்ன செய்வதென்று தெரியாது தனது நான்கு குழந்தைகளையும் அணைத்தவாறு தனது மனைவியுடன் வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கிறார் பௌசல்.


    அப்போது, வீட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பௌசலின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அதன் கண்ணாடிகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தவர்கள்.


    அப்போதுதான், வெளியே ஓடிச்சென்ற பௌசல் தயவுசெய்து வாகனத்தை ஒன்றும் செய்துவிடவேண்டாம் என்றும் தங்களை விட்டுவிடும்படியும் கெஞ்சியிருக்கிறார். அச்சமயம், அவர் மீது பாய்ந்த கும்பல் தாம் கொண்டுவந்த வாளால் சரமாரியாக அவரது கழுத்திலும் முகத்திலும் வெட்டியிருக்கிறது. படுகாயமடைந்த பௌசல் நிலத்தில் விழுந்திருக்கிறார்.


    அப்போது அவரது வீட்டு வேலைத்தளத்திலிருந்த turpentine திரவப்பேணியை எடுத்து திறந்து அதிலிருந்து திரவத்தை படுகாயமடைந்து நிலத்தில் விழுந்து கிடந்த பௌசலின் முகத்தில் ஊற்றிவிட்டு அந்தக்கும்பல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறது.


    குடும்பத்தினர் உடனடியாக அவரை மாறவில வைத்தியசாலைக்கு கொண்டுசென்றார்கள். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.


    தங்களது தந்தையின் இறப்பினை ஜீரணிக்கமுடியாத பௌசலின் நான்கு குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பௌசலின் நான்கு பிள்ளைகளும் ஆறு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. SBS
    Read more »

    நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பேஸ்புக்

    நியூசிலாந்து – கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதன் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதிகள் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டனர்.
    இதனையடுத்து, இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
    இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீடிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இணையத்தில் பகிரப்படும் வன்முறை தொடர்பான காணொளிகளைத் தடை செய்வது குறித்து பாரிசில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், பேஸ்புக் அதன் நேரலை விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    Read more »