சவூதியில் முதல் திரையரங்கு ஏப்ரல் 18ஆம் திகதி திறப்புசவூதி அரேபியாவில் மூன்று தசாப்தங்களின் பின் வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் திரையரங்கு செயல்பட ஆரம்பிக்கப்படவிருப்பதாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.
ரியாத் நகரில் திறக்கப்படவுள்ள முதல் திரையரங்குக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் சவூதி அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவூதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 திரையரங்குகள் வரை திறக்கப்படும் என்று கூறியது. சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவூதி அரசு தெரிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் 1980களின் ஆரம்பத்தில் சினிமாக்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திரையரங்குகளை திறக்கும் அறிவிப்பை சவூதி கடந்த 2017 டிசம்பரில் வெளிட்டது.
எனினும் எந்த வகையான திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.