Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

முறைகேடாக பகிரப்பட்ட பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை 87 மில்.



அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடன் 87 மில்லியன் பேரது தனிப்பட்ட பேஸ்புக் தரவுகள் முறையற்ற வகையில் பகிரப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் நம்புகிறது. இது முன்னர் கூறப்பட்ட எண்ணிக்கையை விடவும் அதிகமானதாகும்.
இது பற்றிய விபரம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பேர்க் புதனன்று வெளியிட்ட அறிவிப்பொன்றில் கூறப்பட்டுள்ளது.
கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக பேஸ்புக் தரவுகளை பயன்படுத்திய செய்தி கசிந்ததை அடுத்து சமூக ஊடகமான பேஸ்புக் சர்ச்சைக்கு முகம்கொடுத்து வருகிறது.
இது பற்றி பேஸ்புக்கின் நிறைவேற்று அதிகாரியாக உள்ள மார்க் சுக்கர்பேர்க் வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தில் முதல் முறை வாக்குமூலம் ஒன்றை அளிக்கவுள்ளார்.
முன்னதாக, தகவல்களை வழங்கும் தளத்தை பேஸ்புக் வழங்குகிறது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களின் பொறுப்பு என முன்னர் கருதியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த மார்க் சக்கர்பேர்க், அத்தகைய குறுகிய எண்ணம் தவறான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று எங்களுக்கு தெரிந்தவரை, நாங்கள் அதிகமான பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தகவல்களை வழங்கும் தளங்களை உருவாக்குவது மட்டும் எங்கள் பொறுப்பல்ல அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பதும் எங்கள் பொறுப்பு என அவர்் தெரிவித்துள்ளார்.
தொடரும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பேஸ்புக் நிறுவனத்துக்கு தலைமை தாங்குவதற்கு தான் சிறந்த நபர் என தெரிவித்துள்ளார் மார்க்.
கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனம் ஒரு செயலி ஊடாக பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி இருப்பதாக கூறப்படுகிறது. 

0 Comments:

Post a Comment