புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் ஆண்களுக்கே உயிராபத்து அதிகம்

பெண்களுக்கு அதிகமான புற்றுநோய் பாதிப்பு வந்தாலும், இறப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களே அதிகம். இதன் காரணம், பெண்களுக்கு 70% உண்டாகும் கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியன சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டுள்ளன.


பெரும்பாலும் புகையிலைப் பழக்கத்தால் வரும் நுரையீரல் மற்றும் வாயில் உண்டாகும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
புற்றுநோய் மரபுவழியாகவும் வரும். பி.ஆர்.சி.ஏ-1 மற்றும் பி.ஆர்.சி.ஏ-2 ஆகிய மரபணுக்கள் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை எட்டு மடங்கு அதிகரிக்கின்றன. ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான காரணம் இதுதான்.
"அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பது, உடல் பருமன், தாமதமாக திருமணம் செய்தல், குழந்தைகளுக்கு பாலூட்டாமல் இருப்பது ஆகியவையே வேகமாக நகரமயமாகி வரும் இக்காலத்தில் அதற்கான காரணமாக இருக்கலாம்.
விழிப்புணர்வு போதாமையால் தாமதமாக நோய் பாதிப்பை கண்டறிதல், மருத்துவர்களிடம் தாமதமாக செல்வது ஆகிய காரணங்களையும் மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். அமெரிக்காவில் 80% மார்பக புற்றுநோய்கள் முதல் மற்றும் இராண்டாம் நிலையிலேயே கண்டறியயப்படுகின்றன