ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வர் பலி


ஒருவரை காணவில்லை; தேடல்
கண்டி, பன்விலவில பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (07) பிற்பகல் 2.45 மணியளவில் பன்வில பொலிஸ் பிரிவிலுள்ள, ஹுலுகங்கை ஆற்றின் கிளை ஆறான தலுஓய, பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில், 03 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சுற்றுலா வந்த, கடுவெல பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றில் கடமையாற்றும் பணியாளர்களில் ஐவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காணாமல் போன் மற்றொரு நபரை தேடும் நடவடிக்கை தொடர்வதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.