Breaking News

>

யூடியுப் தலைமையகத்தில் சூடு நடத்திவிட்டு பெண் தற்கொலை



அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள யூடியும் சமூகதளத்தின் தலைமையகத்தில் பெண் ஒருவர் மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சமூகதளத்தை அடிக்கடி பயன்படுத்துபவர் என்று அடையாளம் காணப்படிருக்கும் இந்த பெண் நிறுவனத்தின் புதிய ‘சர்வாதிகார’ கொள்கைகள் பற்றி சீற்றமடைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை மதியம் யூடியும் தலைமையகத்திற்குள் நுழைந்திருக்கும் 39 வயது நஸிம் அக்தம் என்ற பெண் ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் மீது கைத்துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளார்.
யூடியுபை அதிகம் பயன்படுத்தும் அக்தம் அந்த நிறுவனத்தின் கொள்கைளுக்கு எதிராகவும் தமது வீடியோக்களை அதிகம் தணிக்கை செய்வதற்கு எதிராகவும் அத்திரமடைந்திருந்ததாக கூறப்படுகிறது.
மூக்குக் கண்ணாடி மற்றும் முக்காடு அணிந்து கொண்டு யூடியும் வளாகத்திற்குள் நுழைந்து பெண் ஊழியர்கள் மீது சுட்டதாக பார்த்தவர் ஒருவர் விபரித்துள்ளார். இது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு என பொலிஸார் நம்புகின்றனர்.
இதில் காயமடைந்த 32 மற்றும் 27 வயது பெண்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த பெண்ணின் யூடியுப் கணக்கை அந்த நிறுவனம் நீக்கி இருப்பதோடு அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்குகளும் அகற்றப்பட்டுள்ளன.
எனினும் தனது வீடியோக்களை பார்ப்பதை யூடியும் தடுப்பதாக அவர் தனது தனிப்பட்ட இணையதளத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
யூடியூப் தலைமையகத்தில் சுமார் 1700 பேர் பணி புரிகின்றனர்். கூகுளுக்கு சொந்தமான இந்த நிறுவனம் அந்த பகுதியின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. பணியாளர்கள் தங்கள் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற காட்சிகளை உள்ளுார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 

No comments