சிந்திக்காமலேயே சீரழியும் முஸ்லிம் சமூகம்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் TNA இன் நிபந்தனைகளும் SLMC இன் பம்மாத்தும்

எதனை வெளிப்படுத்துகிறது என சிந்திக்கவே மாட்டோமா!!!
TNA இன் நிபந்தனைகளில் சில

01. வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழர்களயே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டுமாம். இதில் அம்பாறையும் திருகோணமலையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

02. வடகிழக்கில் அபிவிருத்திப் பணிகளிலும் அரச நியமனங்களிலும் அப்பிரதேசத்தில் உள்ளவர்களையே நியமிக்க வேண்டும். இதுவும் மறைமுகமாக பெரும்பான்மையாக தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இக்கோரிக்கைகள் பிரதமர் றணில் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது இவ்விரு கோரிக்கைகளையும் சேர்த்து உற்றுநோக்கினால் நிருவாகத் தலைவர்களும் (அரசாங்க அதிபர்) தமிழர்களே. அதில் வேலை செய்யும் வேலையாட்களும் ( புதிய நியமனங்களில் பெரும்பான்மை தமிழர்களானால்) தமிழர்களே. விளங்கவில்லையா?
வடகிழக்கின் ஒட்டுமொத்த நிருவாகத்தையும் தமிழர்களிடத்தில் வழங்குங்கள் என்று TNA நிபந்தனை விதித்து றணில் ஏற்றுக் கொண்டுள்ளார். ஹக்கீமின் கோரிக்கை என்னவாம்? இதில் ஒரு 5%மாவது கேட்டுப் பெற்றுள்ளாரா??

03. அத்தோடு இணைந்த வடகிழக்கில் சமஷ்டி ஆட்சியை மறைமுகமாக கேட்டு வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றே நிபந்தனையில் எழுதப்பட்டு றணில் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதாவது வடகிழக்கு இணைப்புக்கு முன்னதாக அவற்றின் அரச இயந்திர நிர்வாகத்தை முற்றாக எம்மிடம் தாருங்கள் என TNA கேட்டு றணில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

உண்மையில் TNA இன் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் வடகிழக்கில் எமது நிலமை மேலும் அடிமைத்தனமாகாதா??

எந்தவொரு சமூகம் தம்மைப் பற்றி சிந்திக்கவில்லையோ தானும் அவர்களைப்பற்றி சிந்திக்கப் போவதில்லை என அல்லாஹ் குர்ஆனிலே கூறவில்லையா??

இனிமேலாவது சிந்திப்போமா?

By: Dr Yoosuff