சிறப்புத் தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய்ரஜினி, அக்ைஷ குமார் மற்றும் எமி ஜெக்சன் நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுவரும் 2.0 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஐஷ்வர்யா ராய் நடிப்பதாக தகவல்கள் வௌியாகவுள்ளன.
2.0 திரைப்படத்தின் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து தற்போது கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் பட வெளியீடு தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில், லைக்கா நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ள இத்திரைப்படத்தின், முதல் பாகத்தில் ஐஷ்வர்யா ராய் நடித்திருந்தார். அதனுடன் தொடர்புபடுத்தி சில காட்சிகள் உள்ளமையினால் ஐஷ்வர்யா ராய் சிறப்புத் தோற்றத்தில் 2.0 லும் நடிக்கிறார் என்கிறது தகவல்கள்