Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வெலிகம முஸ்லீம்களின் வரலாறு

கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு

முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,
இலங்கை. 1995
இந்த தகவல்கள் அனைத்தும்  1995 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஆகும் 

வெலிகம முஸ்லீம்களின் வரலாறு
மாவட்ட ரீதியாக மஸாஜித் மாத்தறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்
 பாடசாலைகள் 15 ஆக இருப்பதுபோல,
 அங்கே ஜும்ஆ நடைபெறும் 
மஸாஜித்களின் எண்ணிக்கையும்
 பதினைந்து. இவற்றுள் ஏழு மஸ்ஜித்கள்
 வெலிகமையிலும்
இரண்டு மாத்தறையிலும், ஏனைய 
ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர்
மஸ்ஜிதும் இருக்கின்றது. இந்த
 மாவட்டத்தில் காணப்படும் ஏனைய 
அனைத்து மஸ்ஜித்களும்
சாதாரணமானவை.
பாலத்தடி மஸ்ஜித் வெலிகம நகரத்திலிருந்து 2 கி. மீ. தொலைவில் பாலத்தடி என்ற ஊர் இருக்கின்றது. இற்றைக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காட்டு வழியினூடாகவும் வயல் நிலத்தினூடாகவும் அங்கு செல்ல வேண்டி இருந்தது. வெலிகமையில் முதன்முதலில் முஸ்லிம்கள் குடியமர்ந்த பகுதி பாலத்தடி என்னும் கிராமம். முதல் பள்ளிவாசலும் அங்கு கட்டப்பட்ட மஸ்ஜிதாகும். வெலிகம வந்த முஸ்லிம்கள் நகரத்தை விட்டுத் தொலைவிலிருந்த பாலத்தடியில் குடியேறியமைக் குக் காரணம் என்ன ?
பாலத்தடி என்ற கிராமம் பொல்வத்து கங்கை என்ற ஆற்றுப்படுக்கையோடு இணைந்த பகுதியாகும்.

கி. பி. 1200 இல் பாலத்தடிப் பள்ளிவாசல் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. வெலிகாமத்தில் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுதான். ஜும்ஆத் தொழுகை இங்கு நடாத்தப்பட்டது. வெலிகம கரையோரப் பகுதிகளில் பின்னர் குடியமர்ந்த முஸ்லிம்களும் ஜும்ஆத் தொழுகைக்காக இப்பள்ளிவாசலுக்கு ஆரம்பகாலத்தில் வந்தனர்.
வேர்வலையில் முஸ்லிம்கள் குடியேறியது கி. பி. 1024 இல் என மதிப் பிடப்படுகின்றது. வேர்வலையிலும் வெலிகம பாலத்தடியிலும் குடியேறிய முஸ்லிம்கள் ஹஸரத் உவைஸால் கர்ணியின் சந்ததியினர் என்று சொல்லப் படுகின்றது.
நாம் இன்று காணும் பாலத்தடி ஜும்ஆப் பள்ளிவாசல் 1915 ஆம் ஆண்டுக்குப்
பிறகு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாசலாகும்.
முஹியத்தீன் பெரிய ஜும்ஆ மஸ்ஜித் வெலிகம நகரத்தின் பிரதான ஜும்ஆ மஸ்ஜிதாக இது விளங்குகின்றது. கல்பொக்கையின் தெற்குக் கோடியிலே - புதுத்தெருவின் நுழைவாயிலிலே இப்பள்ளிவாசல் அமையப் பெற்றுள்ளது. அண்மைக் காலத்திலே புனர்நிர்மானம் செய்யப்பட்ட இம்மஸ்ஜித் நவீன அமைப்போடு பார்ப்போர் கண்ணைக் கவரும் வகையிலே இஸ்லாமியக் கலை நுட்பங்களோடு அமையப் பெற்றுள்ளமை வெலிகமை நகருக்கே பெருமை தருவதாகும்.
இம் மஸ்ஜிதின் வரலாறு 400 வருடங்களைத் தாண்டிச் செல்கின்றது. இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு மீஸான் கல்லிலே 1011 என்ற ஆண்டு பொறிக்கப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலே இப்பள்ளிவாசல் மிகச் சிறயதாக அமையப்பெற்றுள்ளதாக அறியக்கிடக்கின்றது. இப்பள்ளிவாசலைச் சூழவுள்ள பகுதிகள் முன்பொரு காலத்திலே மையம் அடக்குவதற்குப் பயன்பட்டதாகக் குறிப்புகள் உண்டு. இப்பொழுதும் இப்பள்ளிவாசலைச் சூழவுள்ள பகுதிகளில் மையம் அடக்கப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில் இங்கு ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை. இப்பகுதி யில் வாழ்ந்த முஸ்லிம்கள் பாலத்தடி ஜும்ஆப் பள்ளிவாசலிலேயே ஜும்ஆத் தொழுகை தொழுது வந்தார்கள். கி. பி. 1787 ஆம் ஆண்டு பள்ளிவாசல் விஸ்தரித்துக் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கு ஜும்ஆத் தொழுகையும் இடம் பெற்றது. உமர்லெவ்வை முகத்தம் ஸெய்யத் மீராலெவ்வை முகத்தம் என்பவரே முதலாவது மத்திச்சமாகக் கடமை புரிந்துள்ளார்.
மீரான் ஸாஹிப் மஸ்ஜித் வெலிகம தலைநகரம், வெலிகம வளைகுடா கடற்கரை, வெலிகம பிரதான பஸ்தரிப்பு நிலையம், வெலிகம ஸாப்பர் மார்க்கட் இவற்றைச் சூழப்பெற்றதாக அமையப்பெற்றது மீரான் ஸாஹிப் மஸ்ஜித், “ பழைய தெரு பள்ளி " என்றும் இதனை அழைப்பர்.
இப்பள்ளிவாசலின் உட்புற மதில்கள் மூன்றடி அகலமுடையனவாகக் காணப் படுகின்றது. இப்பள்ளிவாசலின் தொன்மைக்கும் முதுமைக்கும் இது நல்ல ஆதாரம். 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பள்ளி கட்டப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.
அன்று உபயோகித்த சிற்பக் கலை வேலைப்பாடுகளும் அறபு எழுத்தணிகளும் அதனை மெருகூட்டுகின்றன.
புஹாரி மஸ்ஜித்
புஹாரி மஸ்ஜித் வெலிகம கல்பொக்கையில் அமையப் பெற்றுள்ளது. பொல்வத்து கங்கை எனும் ஆற்றங்கரையிலே அமைதியான ஒரு சூழலிலே அழகொழுகக் காட்சி தருகின்றது. இந்த மஸ்ஜித் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. அல்ஆலிமுல் அரூஸ் அறிஞர் திலகம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பெருமுயற்சியில் இம்மஸ்ஜித் 1884 இல் கட்டப்பட்டது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சாதாரண ஒரு மஸ்ஜிதாக விளங்கி வந்த இந்தப் பள்ளிவாசலில் இப்பொழுது ஜும்ஆத் தொழுகை நடாத்தப்படுகின்றது.
வாரந்தோறும் வெள்ளி இரவுகளில் ஜலாலிய்யா" ராத்தியும், வெள்ளி காலையில் புர்தாவும் நடைபெறுகின்றன.
வெலிப்பிட்டி ஜும்ஆ மஸ்ஜித்
மாத்தறை மாவட்டத்திலே வெலிகம தொகுதியிலே வெலிப்பிட்டி என்ற முஸ்லிம்
கிராமமும் அமைந்துள்ளது. பாலத்தடியிலிருந்து ஏறக்குறைய அரைமைல் தொலைவில் இக்கிராமம் இருக்கின்றது. அமைதியான சூழலிலே அமையப்


பெற்றுள்ள இக்கிராமத்தின் மத்தியிலே ஒரு ஜும்ஆ மஸ்ஜித் கி. பி. 1871 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஜும்ஆப் பள்ளி இடவசதி போதாமையினால் அதற்கு முன்பக்கத்தே இன்னொரு பள்ளிவாசல் சகல வசதிகளுடனும் கட்டப்பட்டது. 1970 களில் கட்டப்பட்ட இப்புதிய பள்ளிவாசல் அல்ஹாஜ் எம். எம். கலில் அவர்களின் பெருமுயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது.
அஸ்ஸய்யது யூசுப் ரிபாய் ஜெம் மமெளலானா அவர்கள் 150 வருடங்களுக்கு முன்னர் இந்த ஊரில் மிக்க செல்வாக்குடன் வாழ்ந்தார்கள். இஸ்லாமிய "தஃவத்" பணியில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்கள்.
இன்று எழில் மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இப் பள்ளிவாசலில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருவதோடு தப்லீக் மர்கஸ் ஆகவும் இது திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கபுவத்தை ஜும்ஆ மஸ்ஜித்

வெலிகம நகரில் கப்புவத்த என்பது ஒரு முஸ்லிம் கிராமம். தெனிப்பிட்டி வழியாகப் பாலத்தடி நோக்கிச் செல்லும் போது இக்கிராமத்தை அடையலாம்.
றிபாய் தரீக்காவைப் பின்பற்றும் முஸ்லிம்கள் இங்கு வாழ்கிறார்கள். இங்கு கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதும் றிபாய் தரீக்காவின் அனுஷ்டானங்களுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதாக விளங்குகின்றது.
கி. பி. 1889 இல் கப்புவத்தைப் பள்ளிவாசலில் றிபாய்த் தரீக்கானுைச் சேர்ந்த ஸைய்யித் முஹம்மத் கோயா தங்கள் அவர்களால் றிபாய் ராத்தியும் கந்தூரியும் தொடங்கி வைக்கப்பட்டன. அன்றுமுதல் இன்றுவரை மிக்க விமரிசையாக அவை நடைபெறுகின்றன.
கி. பி. 1806 ஆம் ஆண்டிலே இவ்வூரில் பாரிய அளவில் மீலாதுன் நபி வைபவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வைபவத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் மீலாதுன் நபி வைபவத்திற்காக ஒரு காணி ஒதுக்கப்பட்டு ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இஃது ஒரு முன்னோடி நடவடிக்கை என மதிப்பிடப் படுகிறது.
ஆரம்பத்தில் இங்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் அளவில் சிறிதாக இருந்தது. இதனால் ஜும்ஆ இங்கு நடைபெறவில்லை. இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் ஜும்ஆத் தொழுகைக்காகப் பாலத்தடி ஜும்ஆப் பள்ளிக்குப் போய் வந்துள்ளார்கள். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அதேநிலை நீடித்துள்ளது. பாலத்தடிக்கும் கப்புவத்தைக்குமிடையே அரைமைல் தூரமும் இல்லை. இதனால் இதில் நடைமுறைப் பிரச்சினை இருக்கவில்லை.
மதுராப்புர மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் மதுராபுரியில் வாழ்ந்து வந்த மக்கள் தெனிப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ஹஸன் ஹாஸைன் பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றி வந்தனர்.

1941 ல் தெனிப்பிட்டி பள்ளிவாசலில் ஏற்பட்ட தரீக்காப் பிரச்சினையை யடுத்து, மதுராபுரி வாழ் மக்களுக்கு தனியான ஜும்ஆப் பள்ளியமைக்கும் தீர்மானம் வந்தது. மர்ஹூம் ரீ. எஸ். அப்துல் லதீப் முன்னாள் அதிபர், பி. எம். அபுகாஸிம் வைத்தியர், பி. எம். அப்துல் கரீம் வைத்தியர், எஸ். டீ. ஸலாஹாத்தீன், எம். பீ. எம். ஸஹிது முன்னாள் அதிபர் இத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டனர். பள்ளிவாசல் அமைப்பதற்குத் தேவைப்பட்ட காணியில் அரைப்பாகத்தை மர்ஹலிம் எஸ். டீ. அபுல்ஹஸன் அவர்கள் அன்பளிப்புச் செய்தார்.
1942 இல் பள்ளிவாசலுக்கான அத்திவாரக்கல்லை ஸர் மாக்கான் மாக்கார் அவர்கள் வைத்தார்கள். மர்ஹூம் அல்ஹாஜ் ரீ. எஸ். அப்துல் லதீப் அவர்களின் தலைமையில் "ஜம்மியத்துல் கைரிய்யதுல் இஸ்லாமியா" இயக்கத்தின் ஆதரவுடன் ஊர் ஜமாஅத்தார், மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவில் கட்டடம் எழுந்தது.
மஸ்ஜிதின் முதல் நம்பிக்கையாளர்களாக அல்ஹாஜ் ரீ. எஸ். அப்துல் லதீபு, டி. எம். அப்துல் கரீம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கலீபதுல் குலபா அல்ஹாஜ் மெளலவி எம். ஸஹ்றுதீன் ஆலிம் நிகழ்த்தினார்கள். மர்ஹலிம் அல்ஹாஜ் கே. பி. எம். மஹ்ரூப் அவர்கள் குர்ஆன் மத்ரஸாக் கட்டடத்தை அன்பளிப்புச் செய்தார். இந்தக் குர்ஆன் மத்ரஸாவில் 1946 முதல் 1980 வரை தொடர்ந்து பணியாற்றிய ஏ. டபிள்யூ. எம். ஹஸன் லெப்பை அவர்கள் பாராட்டுக்குரியவர். அவ்வாறே 1942 முதல் 1980 வரை முஅஸ்ஸினாகக் கடமை புரிந்த மர்ஹஜூம் ஏ. ஸி. தாஜுதீன் அவர்களும் நன்றிக்குரியவர்.
மாத்தறை கடைவீதி பெரிய பள்ளிவாசல் தென்னிலங்கையில் கரையோர மாவட்டங்களில் மாத்தறை மாவட்டமும் ஒன்று. மாத்தறை மாவட்டத்தின் தலைநகரமும் மாத்தறையே. ஏனைய கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் குடியேறிய காலை இங்கும் குடியேறினர் என்பது புலனாகின்றது.
ஆயின் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளிலாவது மாத்தறையில் முஸ்லிம்கள் குடியேறியிருக்க வேண்டும் என்பது தெளிவு. எனவே, அவர்களின் சமய அனுஷ்டானங்களுக்காக மஸ்ஜித்களும் எழுந்திருக்க வேண்டும். இப்பொழுது கடைவீதியில் நாம் பார்க்கும் ஜும்ஆ மஸ்ஜித் ஹி.1138 இல் கட்டப்பட்டதாகும். பின்னர் கி. பி. 1801 ல் இது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. மீண்டும் 1884 இல் விஸ்தரிக்கப்பட்டது. எனவே, இந்த இடத்தில் முன்னர் சிறிய அளவிலான பள்ளிவாசல் இருந்திருக்க வேண்டும்.
கொட்டுவகொடை ஜும்ஆப் பள்ளிவாசலும், கடைவீதி செய்குமார் பள்ளிவாசலும் முன்னர் கடைவீதி ஜூம்ஆப் பள்ளியின் நிர்வாகத்தில் இயங்கின. பின்னர் 1920 களில் கொட்டுவகொடை முஹியத்தீன் பள்ளிவாசலின் நிர்வாகம் அப்பகுதி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. (கொட்டுவகொடை முஹியத்தீன் பள்ளி வாசல பற்றிய தகவல் வேறிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.)
கடைவீதி ஜும்ஆப் பள்ளி மாத்தறையின் மிகப்பழைய பள்ளியாகும். கடைவீதி
வடக்கு, கடைவீதி தெற்கு, இஸ்தீன் நகரம், பொல்ஹேன முஸ்லிம் குடியேற்றத் திட்டம் என்னும் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் பிரதான பள்ளி இதுவாகும்.


காலியிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் பிரதான போக்குவரத்துப் பாதை வலிகமையை அடையும் முன்னர் எதிர்நோக்குவது கப்துறைப் பள்ளிவாசலாகும். கப்துறைப் பள்ளிவாசலைத் தாண்டிக்கொண்டே மாத்தறையை நோக்குவோம். இப்பள்ளிவாசலின் குப்பாவின் எழில் தோற்றம் அரை மைல் தூரத்துக்கு கம்பீரமாகக் காட்சி தருகின்றது.
பெளத்த சிங்கள மக்கள் செறிந்து வாழும் அப்பகுதியில் ஒரு முஸ்லிம் வீடுகூட இல்லாத அப்பகுதியில் ஒரு மஸ்ஜித் - என்ற இயற்கை வளைகுடா பண்டுதொட்டு ஒரு துறைமுகமாகப் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. வெளிநாட்டார் இவ்வளைகுடா மூலம் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ளனர். இதனால் கப்பல் - துறை என்று பெயர் வழங்கலாயிற்று என்றும் பின்னர் கப்துறை என்று மருவிற்று என்றும் சொல்வர்.
இந்த மஸ்ஜிதில் ஸியாரம் கொண்டுள்ள ஷெய்க் இனாயத்துல்லா அவர்கள் இந்த இடத்தில் சமாதி கொண்டதைத் தொடர்ந்து அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் அண்மைக்காலத்திலே புனர் நிர்மாணஞ் செய்யப்பட்டது.
இப்பள்ளிவாசல் கட்டுவதற்குக் காரணமாக இருந்தவர் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷெய்கு இனாயத்துல்லா அவர்களாவார்.
ஹஸன் ஹ"ஸைன் மஸ்ஜித் WW
வெலிகமவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் செல்லும் பிரதான பாதையின் இரு மருங்கிலும் முஸ்லிம்கள் நெருங்கி வாழ்கிறார்கள். வெலிகம தலைநகரில் இருந்து சுமார் 1 1/2 மைல் தூரத்துக்கான பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்த


நெடுஞ்சாலை வழியே கல்பொக்கை, புதிய தெருவு, தெனிப்பிட்டி, மதுராபுரி என்ற நான்கு பகுதிகளும் இருக்கின்றன. புதிய தெருவின் கடைசி எல்லையிலே மதுராபுரியின் தொடக்கத்திலே தான் தெனிப்பிட்டி என்ற பகுதி இடம் பெறுகின்றது. ஹஸன் ஹாசைன் பள்ளி இங்கு அமைந்துள்ளது.
கி. பி. 1800 ஆண்டளவில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அறிய முடிகின்றது. அக்குறஸ்ஸ நோக்கிச் செல்லும் பிரதான பஸ் பாதை காலடிப் பாதையாக இருந்த அந்தக் காலத்திலே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அறிகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரன்மார்கள் இருவருடைய பெயர்கள் இப்பள்ளிவாசலுக்குச் சூட்டப்பட்டுள்ளன. அத்தோடு கர்பலாவை ஞாபகப்படுத்தும் வகையிலே முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் பாரிய கந்தூரி நடைபெறுகிறது. அன்னதானமும் கர்பலா பற்றிய சிந்தனையும் வழங்கப்படுகின்றன.
பதுரர் மஸ்ஜித் வெலிகம நகர சந்தியிலிருந்து சுமார் 72 யார் தொலைவில் இந்த மஸ்ஜித் அமையப் பெற்றிருப்பதால் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிவோர் தொழுகையை நிறைவு செய்வதற்கு ஏற்ற இடமாகக் காணப்படுகிறது.
1946 ம் ஆண்டில் - ஹிஜ்ரி 1385 ரபீஉல் அவ்வல் பிறை 28 இல் இப்பள்ளிவாசல் வக்ப் செய்யப்பட்டது. மர்ஹஅம் எஸ். எல். எம். ஹம்துன் ஹாஜியார் அவர்களின் சொந்தச் செலவில் கட்டப்பட்ட இப்பள்ளிவாசலை அவரது வாரிசுகளே இதுவரை பராமரித்து வருகிறார்கள். ஹம்தூன் ஹாஜியாரின் மறைவுக்குப் பின்னர் அவர்களது சிரேஷ்ட புதல்வர் அல்ஹாஜ் ஷேக் அப்துல் காதர் (அல்ஹாஜ் எச். எச். முஹம்மத்) அவர்கள் கடந்த 39 வருடங்களாக இதனை நிர்வகித்து வருகிறார்கள்.
ஆரம்ப காலத்திலே இப்பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெற்று வந்தது. 1941 இல் மதுராபுரி முஸ்லிம்கள் தமக்கென புதிய ஜும்ஆப் பள்ளியைக் கட்டிக் கொண்டார்கள். அதன் பின்னர் இப்பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறுவதில்லை.
உமர் மிஹ்லார் மஸ்ஜித்
கோட்டகொட என்பது வலிகம முஸ்லிம்கள் வாழும் இன்னொரு பகுதி. அல்லாஹ்வின் அருளால் தண்ணீர் சுரந்தோடும் ஒரு பகுதி இது. முஸ்லிம்களும் அல்லாதோரும் நன்னீர் பருகித் தானம் செய்வதற்கு இக்கிராமத்தை நாடிச் செல்வர்.
1930 வரை இங்கு பள்ளிவாசல்கள் இருக்கவில்லை. இங்குள்ளோர் பழைய தெரு பள்ளிவாசலுக்கோ முஹிதீன் பெரிய பள்ளிவாசலுக்கோ போய் வந்தனர்.
அராபிய தீபகற்பத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள ஹழ்ற மெளத்
என்ற மாவட்டத்திலிருந்து வெலிகமத்துக்கு வருகை தந்த சங்கைக்குரிய அஸ்ஸய்யத் அபூபக்கர் மஷார் மெளலானா என்ற பெரியார் கோட்டகொட
50

பகுதிக்கு விஜயம் செய்த போது நன்னீராடி அங்கு ஓரிடத்தில் இளைப்பாறி தமது முஸல்லாவை விரித்துத் தொழுதார்கள். அப்பகுதிக்கு மஸ்ஜித் ஒன்றின் அவசியத்தை உணர்ந்த அப்பெரியார் தாம் தொழுத இடத்திலேயே ஒரு பள்ளிவாசலைக் கட்ட நடவடிக்கை எடுத்தார்கள். இந்த அடிப்படையில் 1933 ல் இங்கு மஸ்ஜித் உருவானது. இதுவே உமர் மிஹ்லார் மஸ்ஜித்.
மஸ்ஜிதுஸ் ஸலாம் நடை வருடம் 1994 இல் ஒரு புது மஸ்ஜித் அண்மைக்காலத்தில் வெலிகம கொரட்டுவப் பகுதியில் சனப்பெருக்கம் கூடி விட்டதால் ஒரு புதுப்பள்ளியின் தேவை உணரப்பட்டது. அந்த அடிப்படையில் எழுந்தது மஸ்ஜிதுல் ஸலாம்.
வெலிகம புகையிரத நிலையத்துக்குப் பின்புறமாகவும், பிரதான பஸ் நிலையத்துக்கு முன்புறமாகவும் இரண்டு பிரதான போக்குவரத்துச் சாலைகளின் நடுவே இஃது இடம்பிடித்திருப்பது பெரும் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். வெளி ஊர்களிலிருந்து தூரப் பிரயாணம் செய்து வருவோருக்கும் வெலிகம உள்பக்க தூர இடங்களிலிருந்து வெளியூர் செல்ல வருவோருக்கும் இந்த மஸ்ஜித் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தொழுகையை நிறைவேற்றுவதற்கும் ஓய்வுபெற்றுச் செல்வதற்கும் இந்த மஸ்ஜித் பெரும் பேறாகும்.
மஸ்ஜிதுல் அஸ்மா
38 முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்கிறார்கள். இவர்களுக்காக ஒரு ஸ்ேஜித் எழுந்தது. ஆரம்பத்தில் பலகையினால் அடைக்கப்பட்ட ஒரு மஸ்ஜிதே எழுந்தது. 1991 இல் பலகை பள்ளி இருந்த இடத்தில் ஒரு புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப் பட்டது. இந்தச் சிறிய பள்ளிவாசலில் குர்ஆன் பள்ளிக்கூடத்துக்கான ஒழுங்கு களும் செய்யப்பட்டுள்ளன.
கப்துறை ஸியாரம்
இற்றைக்கு முன்னூறு வருடங்களுககு முன்னர் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதி வெலிகம வளைகுடாவை ஓர் எலலையாகக் கொண்டதும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 அடிகள் உயரங் கொண்டதுமான மலைப்பாங்கான ஒரு காட்டுப்பகுதி நூறு வீதமும் சிங்கள மக்கள் அப்பகுதியைச் சூழ வாழ்ந்து கொண்டு இருந்தனர். அந்த மலைக் குன்றிலே ஒரு ஸியாரம்.
அன்று காட்சியளித்த அந்த ஸியாரம் இன்றும் காட்சி அளிக்கிறது. அன்று அடர்ந்த காட்டிலே ஸியாரம். இன்று மிக்க கம்பீரமான காட்சி அடர்ந்த காடாக இருந்த அந்த மலையை ஊடறுத்துக் கொண்டு காலி - மாத்தறை பிரதான பஸ் வீதி அமைக்கப்பட்டுள்ளது. நாம் குறிப்பிடும் ஸியாரம் இடம் பெற்றுள்ள பள்ளிவாசலை ஒட்டியதாகப் பகிரங்கப் பாதை அமைக்கப்பட்டமை ஓர் அற்புதமான நிகழ்வாகும். ܚ
இவ்வழியே பிரயாணம் செய்யும் முஸ்லிம்கள் தமது வாகனத்தை நிறுத்தி * பாத்திஹா " ஒதிவிட்டுச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.


அப்பகுதி சிங்களவர்கள் இந்தப் பள்ளிவாசலையும் ஸியாரத்தையும் மரியாதையாக மதிக்கின்றார்கள். அவ்வப்போது இந்த இடத்திலே பலவகையான " கறாமாத்கள் " " அற்புதங்கள் " நிகழ்கின்றன. சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது காணிக்கை இட்டுச் செல்வார்கள். ஒரு பக்கத்தில் ஆழிய சமுத்திரம். மறு பக்கத்திலே நெடுஞ்சாலை இரண்டுக்கும் இடையிலே இந்த ஸியாரம் இடம்பெற்றுள்ளமை விஷேசமாகும்.


வெலிகம கல்பொக்கையில் அமைந்திருக்கும் மத்ரஸ்துல் பாரீ 110 வருடங்கள் மூப்புடையது. இலங்கைத் தீவிலே அரபு மத்ரஸா வரிசையிலே முதலில் தோன்றியது என்ற முத்திரையைப் பெற்றது. பன்மொழிப் புலவர், அரபுமொழி வல்லுநர் - மார்க்க அறிவு ஞானமேதையான அல்லாமா மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் அவர்கள் கி. பி. 1884 இல் இந்த மத்ரஸாவை ஸ்தாபித்தார்கள்.
புகாரி மஸ்ஜிதின் தோற்றத்தோடு பாரீ கலாபீடத்துக்கான தோற்றுவாயும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புகாரி மஸ்ஜிதின் ஒரு புறத்தே மத்ரஸா பாரியும் ஆரம்பமாயிற்று. அன்றுமுதல் இன்றுவரை அல்லாஹ்வின் அருளால் எந்தத் தங்குதடையுமின்றி சீரும் சிறப்புமாக அது வீறு நடைபோடுகின்றது.
பலநூறு உலமாக்கள் இங்கு பயின்று நாட்டின் நாற்புறங்களிலும் பணிபுரிந்து வருகின்றார்கள். அல்லாஹ்வுக்கே ஷாக்ரு.


அல்ஹாபிஸ் அல்ஹாஜ் கைரிய்யா ஆலிம் அவர்களது சேவைக் காலத்திலே இரு மாடிக் கட்டிடமாக விசாலிக்கப்பட்டது. அல்ஹாஜ் எம். எச். எம். ஹபீழ் அவர்களின் பங்களிப்பும் இக்கட்டிடத்திற்குத் துணையானது. 1940 களில் இப்புதுக் கட்டிடம் உருவானது.
1984 இல் நூற்றாண்டு விழா கண்ட இந்த மத்ரஸாவின் முதலாவது அதிபராகக் கட்மை புரிந்தவர் கல்பொக்கையைச் சேர்ந்த முஹம்மத் இப்ராஹிம் ஆலிம் என்பவர். இவர் 1884 இல் அதிபரானார். சின்ன ஆலிம்" என்றும் இவரை அழைப்பர். 1901 வரை இவர் கடமை புரிந்து இறையடி சேர்ந்தார். மத்ரஸாவின் ஒரு பகுதியிலே இவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
கடந்த வருடங்களில் 8 உலமாப் பெருமக்கள் பதவி வகித்து வந்துள்ளார்கள். அவர்களில் அல்ஹாபிஸ் ஸகரிய்யா ஆலிம் அவர்கள் 46 வருடங்கள் அதிபராகக் கடமை புரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் மத்ரஸாவுக்குப்
பக்கத்திலே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவ்வருட ஆரம்பத்தில் இருபதாவது பட்டமளிப்பு விழாவை இம்மத்ரஸா கண்டது. இதுவரை அரபு மத்ரஸாவாக இயங்கிய இந்த ஸ்தாபனத்திலே ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸா அண்மைக் காலத்திலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நூரானியா மத்ரஸா
புதிய தெருவில் அரபு மத்ரஸாக்கள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் புதிய தெருவிலே இரண்டு அரபு மத்ரஸாக்கள் * முர்ஸிய்யா " அரபுக் கல்லூரி ஒன்று " ஹில்ரிய்யா " அரபுக் கல்லூரி அடுத்தது. ஒரே தெருவில் இரண்டு மத்ரஸாக்கள் இப்பகுதியில் மக்கள் ஆத்மீகத்துறை அறிவுக்கு எந்தளவு முக்கயத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல ஆதாரம். பாரீ மத்ரஸாவையும் சேர்த்துப் பார்த்தால் வெலிகமையில் மூன்று அரபு மத்ரஸாக்கள் இயங்கி வருவதைப் பார்க்கலாம்.
புதுத்தெரு இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

அஹ்லுல் பைத் என அழைக்கப்படும் நபிகள் (ஸல்) அவர்களின் வம்சாவழியினர் அதாவது ஸய்யத் வம்சத்தினர் இங்கு நிறைய வாழ்கின்றனர். ஹழ்றல் மெளத். மக்கா, பக்தாத், யெமன், இந்தியா போன்ற பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் இங்கு வாழ்கிறார்கள். மெளலானா குடும்பங்கள் என்று சிறப்பாக இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
அல்ஹிப்சி, அல்பார், அல்முஷைக் அல்ஹாசிமி, அல்மக்பூர், அல்ஜமாலுல் ஷலஸ், அஸ்ஸக்காப் போன்ற கபீலாக்கள் இங்கு ஏராளம். இவர்களது வருகை 300 வருடங்களுக்கு மேற்பட்டது.
அரபு மத்ரஸாக்களும், ஸய்யத் வம்சத்தவர்களும், மஸ்ஜித்களும் ஹிப்லு மத்ரஸாக்களும் நிறையப்பெற்ற இப்பகுதி இஸ்லாமிய விழுமியங்கள் நிறையப்பெற்ற ஒரு பகுதியாகும்.
முர்ஸிய்யா அரபு கலாசாலை வெலிகம புதிய தெருவுக்குள் நுழைந்ததும் முர்ஸிய்யா அரபு மத்ரஸாவை நாம் பார்க்கலாம். தென்னிலங்கையில் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக தீனொளி பரப்பும் இம் மத்ரஸா பல உலமாக்களை உற்பத்தி செய்துள்ளது. இவ்வருடம் ஜனவரியில் இம் மத்ரஸாவின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா விமரிசையாக நடந்தேறியது.
" அஸ்ஸாவியதுல் ருத்ளிய்யது லிஷ்ஷாதுலிய்யதில் பாஸிய்யா " என்ற ஸாவியாவிலே ஹிஜ்ரி 1340 கி. பி. 1922 இல் இம்மத்ரஸா தொடங்கப்பட்டது.
ஷாதுலிய்யா தரீக்காவைப் பின்பற்றும் இஃவான்கள் நிர்வாகத்தில் இந்த மத்ரஸா நடைபெறுகின்றது. வெளியூர் மாணவர்களும் உள்ளூர் மாணவர்களும் இங்கு பயின்று வெளியேறுகின்றார்கள். மெளலவி ஸால்தான் முஹிதீன் ஆலிம் அவர்கள் இப்போது அதிபராகக் கடமை புரிகிறார்கள்.
மத்ரஸ்துல் கிழ்ரிய்யா
புதிய தெருவில் அமையப்பெற்றிருக்கும் இம் மத்ரஸா, காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த பெரியார்களின் நிர்வாகத்தில் இயங்குகின்றது. பொல்வத்து கங்கை கரையோரத்தில் அமையப் பெற்றிருக்கும் இந்த மத்ரஸ்ா அழகிய தோற்றத்துடன் புனர் நிர்மாணஞ் செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது. மார்க்க அனுஷ்டான பயிற்சி நெறிகளுக்கு இம்மத்ரஸாவிலே முக்கித்துவம் கொடுக்கப்படுகின்றது. "தப்லீக் " நடைமுறைகளும் இங்கு கவனிக்கப்படுகின்றது.
இம்மத்ரஸாவில் தேர்ச்சியடைந்து வெளியேறிய உலமாக்கள் நாட்டின் பல பகுதிகளிலுமிருக்கிறார்கள். அவ்வப்போது பட்டமளிப்பு விழாக்களும் இடம்பெறுகின்றன. மெளலவி இக்பால் ஆலிம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றுகிறார்கள்.


அல்ஹாஜ் அல்ஹாபிஸ் கைரிய்யா ஆலிம் அவர்கள் கல்பொக்கை மத்ரஸ்துல் பாரியில் கடமையாற்றிக்கொண்டிருந்த அதேகாலத்தில் புதுத்தெரு மத்ரஸ்துல் கிழ்ரிய்யாவிலும் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். சம காலத்தில் இருவேறு மத்ரஸாக்களில் கடமை புரிந்த புருஷராகவும் ஸ்கரிய்யா ஆலிம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம்வரை இவ்வாறு கிழ்ரியாவிலும் அவர் அதிபர் பதவி வகித்துள்ளார்.
சன்மார்க்கப் பெரியார்கள் மாத்தறை மாவட்டத்தில் சன்மார்ககப் பெரியார்கள் வரிசையில் பலர் பிரகாசிக்கின்றனர். அறிவுத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும் கலங்கரையாக விளங்கியவர்களுள் ஒரிருவரை மாத்திரமே இங்கு தருகிறோம்.
ஜாமாலிய்யா ஸய்யத் யாளின் மெளலானா
மாத்தறை மாவட்டத்தில் சன்மார்க்கப் பெரியார்கள் வரிசையில் பலர் அரபு மொழியிலே பா இயற்றும் புலவரானார். மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த திக்குவல்லை இவர்களது பிறப்பிடம். இவர்களது தகப்பன், வழி பக்தார், அஸ்ஸய்யித் முஹம்மத் பின் இமாம் அஸ்ஸெய்யித் ஜமாலுத்தீன் (ஜமாலிய்யா, மெளலானா) என்பவரே இவர்களது தகப்பன். ஹி 1317 இல் கி. பி. 1889 இல் இவர்கள் பிறந்தார்கள். வெலிகம பாரீ அறபுக் கல்லூரியில் தனது ஆரம்ப அறிவைப் பெற்ற இவர்கள், பிற்காலத்தில் வெலிகம வெலிப்பிட்டியில் திருமணம் முடித்து அங்கே வாழ்ந்து அவர்களது அந்திய காலத்தில் கல்பொக்கையில் குடியமர்ந்தார்கள்.
செய்கு இஸ்மாயில் இப்னு இஸ்ஸத்தீன் யமனி (அறபி அப்பா) அரபி அப்பா அரப்ஸாஹிப் அப்பா என அழைக்கப்படும் அல் குத்பு செய்கு இஸ்மாயில் இப்னு இஸ்ஸாத்தீன் யமனி அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் நேரடி வழித் தோன்றலும் சாதுலிய்யாத் தரீக்காவின் செய்கும் ஆவர். அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் வழித் தோன்றலில் பெண்ணெடுத்துத் திருமணம் முடித்தார்கள்.
அரபி அப்பாவும் அவரது தோழர் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகக் கனவானுமாகிய மஹம்மது காஸிம் பாய் என்பாரும் ஒரு கப்பலில் வரும்போது கடலில் ஏற்பட்ட சுழி காரணமாகக் கப்பல் உடைந்து அதன் மரக்கட்டை ஒன்றின் உதவியோடு வெலிகமைக்கரையை அடைந்தார்கள். அரபி அப்பா அவர்கள் வெலிகாமத்தில் மணமுடித்து வாழ்ந்தார்கள். 1848 இல் (ஹி 1262 இல்) இங்கே காலமாகி வெலிகம ஜும்ஆ பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டார்கள். காயல்பட்டணத்தைச் சேர்ந்த செய்கு அஹம்மத் ஆலிம் அவர்கள் வெலிகாமத்தில் குர்ஆன் ஓதிக் கொடுக்கும்படி பணித்தார்கள். இவர்களிடம் ஒதியவர்கள்தான் உமர் லெவ்வை ஆலிம் அவர்கள்.
தேசத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தாக்கின. வெலிகாமப் பகுதியில் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு வாழ்ந்த வானிஜயோ இனத்தவர்கள் இப்பிரதேசத்தில் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்றும், உங்களை நாம் மன்னனாக ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கூறி யுத்தம் பரவாது தடுத்தார்கள். இச்சம்பவம் வெலிகாமத்தில் முஸ்லிம் வியாபாரிகள் செல்வாக்கு மிக்கவர்களாக வாழ்ந்து வந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. கி. பி. பதினொராம் நூற்றாண்டில் தெற்கு, தென்மேற்குக் கரையோரங்களில் முஸ்லிம்கள் கணிசமான அளவு குடியேறியுள்ளார்கள். பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் அவர் களின் செல்வமும் செல்வாக்கும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. இலங்கையை ஆண்ட மன்னர்களிடமிருந்து முஸ்லிம்கள் பல சலுகைகளைப் பெற்றிருந்தனர். அவற்றுள் சட்டம் சம்பந்தப்பட்டதும் ஒன்றாகும். முஸ்லிம் கடலோடிகள், வணிகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் துறைமுகத்திலே தீர்க்கப்பட்டன. அதற்கான நியாய சபைகள் துறைமுகத்திலே இருந்தன. ஆலிம்கள், வணிகர்கள், முஸ்லிம் கடலோடிகள் அதில் அங்கம் வகித்தனர். தென்னிந்தியா - இலங்கை சிறு கப்பல்களில் வணிகம் செய்த முஸ்லிம்களின் சட்டம், கிழக்கு ஆபிரிக்கா, அராபியா, பாரசீக வளைகுடா - சட்டம், இலங்கை தொடர்பான சட்டம், மலாக்கா,கிழக்கிந்திய நாடுகள் இலங்கை தொடர்பான
சட்டம் என்ற வகையில் வழக்குகள் விசாரித்துத் தீர்க்கப்பட்டன. "
இக்கூற்றுக்களின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்கள் வசித்துவந்த கரைசார்ந்த பெரும் நகரங்களில் கணிசமான தொகையினராக ஆலிம்கள் இருந்தார்கள் என்றும் அவர்களைப் பயிற்றுவிக்க மத்ரஸாக்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் துணியலாம். அதேவேளையில் பாரம்பரியமாக ஆலிம்கள் தாம் கற்ற கல்வியைத் தமது பிள்ளைகளுக்கோ, சினேகிதர்களின் பிள்ளைகளுக்கோ, உறவினர்களுக்கோ பயிற்றுவித்திருக்கவுங் கூடும். அவற்றைப் பற்றிய தடயங்கள் தற்பொழுது கிடைக்கவில்லை. *
மத்ரஸாக் கல்வி :
முஸ்லிம் சிறார்கள் முதலில் மக்தப் என்ற ஆரம்பப் பள்ளியில், பயின்று பின்னர் மத்ரஸா என்னும் உயர்கல்வி நிலையங்களில் கற்றனர். திருக்குர்ஆன், ஹதீஸ், ஷரீஆ பிக்ஹ், இஸ்லாமிய சரித்திரம், அரபு மொழி, இலக்கணம், கவிதை, எழுத்தணிக்கலை மட்டுமல்லாது எண்கணிதம், கேத்திரகணிதம், அட்சர கணிதம், புவியியல், வானியல், வைத்தியம் ஆகியவைகளும் கற்பிக்கப்பட்டன.

போர்த்துக்கேயரின் அடாவடித்தனங்களால் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் மிகவும் இம்சிக்கப்பட்டார்கள். 1575 ஆம் ஆண்டு கரையோரத் தாக்குதலின்போது வெலிகாமப் பகுதியில் பெருந்தொகையான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 1646 இல் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆதிக்க வேட்டையின் போது மாத்தறையில் முஸ்லிம்கள் பயங்கரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்களும் சிறுவர்களும் அடிமைத்தனத்திற்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இதனால் கரையோரத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். திக்குவல்லை, மீயல்ல, கிரிந்தை, கந்தரை, கொடயிட்டிய, ஹொரகொட போன்ற முஸ்லிம் கிராமங்கள் தோன்றின.
முஸ்லிம்களின் தனித்துவம் : முஸ்லிம்களின் வர்த்தகம், பண்பாட்டு மலர்ச்சி, செல்வாக்கு என்பன இக்காலத்தில் படிப்படியாக கீழ்நோக்கியே சென்று கொண்டிருந்தன. இதற்கு ஐரோப்பியரின் வர்த்தகப் போட்டியும், கப்பற் கைத்தொழிலில் அவர்கள் அடைந்திருந்த பெருமுன்னேற்றமுமே காரணமாகும். கரையோரப் பகுதிகளில், குறிப்பாக மாத்தறை, வெலிகாமம் ஆகிய இடங்களில் போர்த்துக்கேயரின் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்ததால் முஸ்லிம்கள் உள்நாட்டுப் பகுதிகளில் குடியமர்ந்தனர். " தாம் சென்ற இடங்களில் பள்ளிவாசல்களை நிறுவி சமய, பண்பாட்டு ஒழுக்கங்களைப் பேணிக் கொண்டனர். என்றாலும் முஸ்லிம் குடும்பங்கள் சிதறின. செல்வங்கள் அழிந்தன. கல்வி கலாச்சார விருதுகள் தேய்ந்தன. ஆனாலும் அவர்களது மார்க்க பக்தி, மார்க்க விசுவாசம் மட்டும் ஆணித்தரமாக வேரூன்றித் தழைத்து, துர்ச்செல்வாக்குப் புயல்களுக்கு இசைந்து கொடுக்காது நிமிர்ந்து நின்றது."

ஒல்லாந்தர் காலத்தில் : போர்த்துக்கேயருக்குப் பின் ஆட்சிபுரிந்த ஒல்லாந்தர் காலத்திலும் நிலைமை மாறவில்லை. பெரும்பாலும் முஸ்லிம்கள் ஒதுங்கியே வாழ்ந்தனர். 1856 ஆம் ஆண்டு வெலிகாமம் முஸ்லிம்களின் இறங்குதுறையாக இருந்தது. அப்பொழுது வெளிநாட்டிலிருந்து பல முஸ்லிம்கள் இங்கு வந்தார்கள். அதைக் கட்டுப்படுத்து முகமாக டச்சு ஆளுனர் தமது மாத்தறை, திஸாவாலை, வெலிகம முஸ்லிம்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்களின் தொழிலைக்
13 o ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆணையிட்டார். ஆயினும் காலி, மாத்தறைப் பகுதிகளில் சுங்கப்பகுதி செயற்பட்டு வந்ததாலும் இதனைக் கண்காணிப்பது இலகு என்பதாலும் இம்முயற்சியைக் கைவிட்டனர். இவ்வாறு வெலிகாமத்தில் வந்திறங்கிய இம்முஸ்லிம்கள் நீட்ட சட்டையும், முதுகுப்புறமாகத் தொங்க விடப்பட்ட நீண்ட தலைப்பாகையும் அணிந்திருந்தமையால் ஒல்லாந்தரால் இலகுவில் இனங்காணப்பட்டார்கள். தென் அராபியப் பகுதியிலிருந்தும், இந்தியா வின் தென்பகுதியிலிருந்தும் வந்த முஸ்லிம் சமயப் பெரியார்களே இவர்கள் எனக் கருதலாம்.


முஸ்லீம் பாடசாலை

அந்நூர் மகளிர் மகா வித்தியாலயம் :
இப்பாடசாலை வெலிகாமத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் தெனிப்பிட்டியில் கப்புவத்தை என்ற முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் சின்னலெப்பை என்பவரால் நடத்தப்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடம் மத்ரஸதுல் இஸ்லாமியா என்ற கந்தூரிக் கூடத்துக்கு மாற்றப்பட்டு, 1867 இல் அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரைப் பெற்றது. புதிய தெருவைச் சேர்ந்த மர்ஹாம் அல்ஹாஜ் எம். எம். இஸ்மாயில் இதனை நீண்ட காலம் நடத்தி வந்தார். 1910 முதல் திருவாளர்களான என். ரி. துரைசிங்கம், வை. எம். எலிஸபெத், வல்லிபுரம் ஆகியோர் இதன் தலைமை யாசிரியர்களாகக் கடமையாற்றினர். 1927 இல் இதன் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்ட திரு. எஸ். என். தேவநேசன் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. 1933 இல் பாடசாலைக்கான புதுக்கட்டிடமும் ஆசிரியர் விடுதியும் கட்டப்பட்டு 1937இல் திறந்து வைக்கப்பட்டன. 1936 இல் கனிஷ்ட பாடசாலைச் சான்றிதழ்ப் பரீட்சைக்கும், தோற்றச் செய்துள்ளார். மாணவர்களைப் பாடசாலைக்கு வரச் செய்வதில் அதிகம் முயற்சி செய்துள்ளார். இப்பாடசாலையின் அபிவிருத்தியிலும், கல்வி வளர்ச்சி யிலும் கணிசமான அளவு பங்காற்றிய அதிபர்கள் அல்ஹாஜ் எம். ஏ. சி. எம். ஜிப்ரி (1955 - 1962), அல்ஹாஜ் ஏ. எம். எம். உவைஸ் (1963 - 1970) மர்ஹாம் எம். எல். எம். எம். ஸலாஹாத்தீன் (1972 - 1983) அல்ஹாஜ் எம். எச். எம்.


இஸ்மாயீல் (1983 - 1993) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இப்பாட சாலை 1992 ஆம் ஆண்டு 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி தற்பொழுது மாத்தறை மாவட்டத்திலே முதலாவது முஸ்லிம் பெண்களுக்கான கலாநிலையமாக உயர்வுபெற்று விளங்குகின்றது. இதன் அதிபராக ஜனாபா ஏ. எம். எப். மதனியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு 215 மாணவிகளும் 12 ஆசிரியைகளும் 4 தொண்டர் ஆசிரியைகளு
முள்ளனர்.
அறபா தேசியப் பாடசாலையும், அறபா கனிஷ்ட வித்தியாலயமும் : இவ்விரு பாடசாலைகளும் ஒரு தாய்வயிற்றுப் பிறந்த இரட்டைக்குழந்தைகள். வெலிகாமத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் இவையிரண்டும் அமைந்துள்ளன.
குர்ஆன் மத்ரஸாக் கல்வியே அகத்தியமானது என்ற நிலைப்பாட்டில் சன்மார்க்கக் கல்வி பயின்ற முஸ்லிம்கள், ஏனைய சமூகத்தவரின் துரித முன்னேற்ற நிலையைக் கண்டு இப்பகுதி முஸ்லிம் சிறார்களுக்கும் உலகாயதக் கல்வியைக் கற்பிக்க வேண்டுமெனத் துணிந்தனர். குர்ஆன் பள்ளிக்கூடத்திலேயே தமிழ்க் கல்வியையும் கணிதத்தையும் போதித்தனர். ஆரம்பமாக பெரிய நொத்தாரிஸ் என்றழைக்கப்பட்ட செய்யது முஸ்தபா நொத்தாரிஸ் ஹாஜியார் வீட்டில் இவ்வாறு ஒரு பாடசாலை இருந்து வந்துள்ளது. 1888 ஆம் ஆண்டு முதல் அவரது மூத்த மகன் அஹ்மது நெய்னா மரைக்கார் தமிழ், கணித பாடங்களைப் போதித்து வந்துள்ளார். கல்வியில் ஆர்வம் பெருகியதாலும், இடவசதி போதாம லிருந்ததாலும் இப்பாடசாலையை ஒரு தனியான இடத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் வாழ்ந்த பெரியார்களின் ஒத்துழைப்பினாலும் சங்கைக்குரிய ஸெய்யித் ஸாஹிர் மெளலானா அவர்களின் பெருமுயற்சினாலும் 1901 ஆம் ஆண்டு தற்போது அறபா கனிஷ்ட வித்தியாலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு தற்காலிகக் கட்டிடத்தில் அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மெளலானா அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக 1905 ஆம் ஆண்டு அங்கு ஒரு நிரந்தரக் கட்டிடம் எழுப்பப்பட்டு அதில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. அஹ்மது நெய்னா மரிக்காரே அங்கும் கல்வி போதித்து வந்தார்கள். அவரைத் தொடர்ந்து சின்ன நொத்தாரிஸ் அவர்களின் புதல்வர்களுள் ஒருவரான ஓ. எல். எம். ஹாமிம் மாஸ்டர் அவர்களும் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்கள். இவருக்குப் பின் ஜனாப் எஸ். ஏ. ஹன்னான் என்பார் இங்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். 1920 இல் திரு. ஜி. எஸ். எம். வல்லிபுரம், பின்னர் திருவாளர்களான எஸ். ஏ. அம்பலம் (1928), கே. தேவசகாயம் (1929), சீ. பொன்னையா (1933) ஆகியோர் வேற்று மதத்தவர்களாயிருந்த போதிலும் தன்னலங்கருதாது இக்கலையகத்தின் உயர்ச் சிக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். அடுத்து இதே பாடசாலையில் பயின்றவரும் இலங்கையின் முதல் தமிழ் பயிற்றப்பட்ட ஆசிரியருமான மர்ஹாம் அல்ஹாஜ் சீ. எஸ். அப்துல் லதீப் 1935 ஆம் ஆண்டு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். பதினொரு வருடங்கள் இவரது அயரா முயற்சியாலும், அவருக்குத் துணையாக இருந்து உதவிபுரிந்த திரு ஜீ. ஏ. ரோஸ்டிவாஸ் அவர்களின் உழைப்பினாலும் வருடாந்தம் சிரேஷ்ட பாடசாலைப் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைவது பெருகிக் கொண்டே வந்தது.
04

முதலில் இது அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலையாகவும் பின்னர் ஆங்கில சுயபாஷா பாடசாலையாகவும், மீண்டும் தமிழ்ப் பாடசாலையாகவும் பின்னர் துவிபாஷா பாடசாலையாகவும், சொற்ப காலத்தில் நாட்டுக்கல்வி முறைப் பாடசாலையாகவும் மாறிற்று. காலத்துக்கேற்ற கோலம் பூண்டுவரும் கல்விக் கொள்கையின் பிரதிபலிப்பாக இப்பாடசாலையும் விளங்கிற்று. 1946 இல் கனிஷ்ட பாடசாலை, ஆரம்பப் பாடசாலை என இரு வெவ்வேறு பிரிவுகளாக இரு தலைமையாசிரியர்களால் நிர்வகிக்கப்பட்டு 1951 ஆம் ஆண்டு மர்ஹாம் ஏ. எச். எம். எம். வெபா அவர்களின் தலைமையில் ஒரே பாடசாலையாக இணைக்கப்பட் டது. 1958 இல் சிரேஷ்ட பாடசாலையாகவும், 1961 இல் முஸ்லிம் மகாவித்தியா லயமாகவும் தரமுயர்த்தப்பட்டது.
இப்பாடசாலைக்கான இடவசதியை அதிகரிக்கும் பொருட்டு 1981 இல் இங்கி ருந்து நூறு மீற்றர் தூரத்திலிருந்த செட்டிவத்தையில் ஐந்து ஏக்கர் காணியை அரசாங்கம் எடுத்து, வகுப்பறை மாடிக் கட்டிடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடம், தச்சுத் தொழிற்கூடம், மனையியல் அறை, நூல் நிலையம், அதிபர் விடுதி, மாணவர் விடுதி, கூட்ட மண்டபம், சமூக அறிவியற்கூடம், விளையாட்டுத் திடல், கணணி அறை என்பவற்றோடு பள்ளிவாசல் ஒன்றையும் கொண்டதாக தென்மாகாணத்திலே ஒரு முதற்தரப் பாடசாலையாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் பின்னணியில் நின்று சேவையாற்றிய அதிபர் மர்ஹாம் ஏ. எச். எம். எம். வெபா அவர்களும் முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் நன்றியுடன் நினைவுகூரத் தக்கவர்களாவர். 1980 இல் இது மத்திய மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட் டது. அண்மைக்கால அபிவிருத்திப் பணிக்கு தென்மாகாணசபை உறுப்பினர்களா யிருந்த ஜனாப் ஏ. சீ. எம். மஹ்ரூப், அல்ஹாஜ் எம். எம். ராளிக், ஜனாப் எம். எஸ். எம். அக்ரம் ஆகியோரும், தென்மாகாண இஸ்லாமிய செயலகப் பணிப்பாளர் அல்ஹாஜ் எச். ஏ. அப்துல் கப்பார் அவர்களும் ஆற்றிய பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கதாகும்.
1965 ஆம் ஆண்டு அரசாங்க மாற்றத்துடன் அதிபர் ஏ. எச். எம். எம். வெபா அவர்களும் இடமாற்றம் பெற்றுச் சென்றமை அறபாவுக்கேற்பட்ட துரதிஷ்டமிக்க ஒரு சம்பவமாகும். இவருக்குப்பின் அதிபர்களாயிருந்த ஜனாப்களான பீ. எம். நயீம் (1965), மர்ஹாம் எஸ். எம். ஏ. எம். முஸம்மில் ஆலிம் (1987), மர்ஹாம் கே. எம். அபூபக்கர் (1970), எம். வை. முஸ்லிம் (1973), எம். என். உமர்மிஹ்லார் (1975), எஸ். எப். ஏ. எம். நாளிர் (1976, மீண்டும் 1982) ஏ. ஆர். எம். ஹாஸைன் (1979) ஆகியோரின் சேவை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இதன் அதிபராக அல்ஹாஜ் எம். எச். எம். இஸ்மாயீல் (1993 முதல்) கடமையாற்றிவருகிறார்.
அறபா கனிஷ்ட வித்தியாலயம் 1988 ஆம் ஆண்டு மகாவித்தியாலயத்திலி ருந்து பிரிந்து தனியாக இயங்க ஆரம்பித்தது. அல்ஹாஜ் மர்ஹாம் ஓ. எஸ். எம். றவுப் முதல் அதிபராக இருந்தார். 1970 முதல் அல்ஹாஜ் ஏ. எம். எம். உவைஸ் அவர்களும் 1984 இல் சங்கைக்குரிய ஜமாலியா செய்யித் ஹாரிஸ் மெளலானா அவர்களும் அதிபர்களாக இருந்து பாடசாலை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார்கள். தற்காலிக ஓலைமடுவம் அகற்றப்பட்டு நிரந்தரக்கட்டிடம் ஒன்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரத்தியேகக் கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டன. மேலும் இட நெருக்கடி காரணமாக பிரதான கட்டிடம் மேலும் ஐம்பது அடி விஸ்தரிக்கப்பட்டது. சிறுவர்களுக்கான பற் சிகிச்சை நிலைய


மொன்றும் இங்கு அமைந்துள்ளது. விளையாட்டுத்திடல் இல்லாமை ඉල් பெருங்குறையாகும். தற்போது இதன் அதிபராக ஜனாப் ஏ. ஆர். எம். இர்சாத் கடமையாற்றி வருகிறார்.
அறபா கனிஷ்ட வித்தியாலத்தில் முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டுவரை 650 மாணவர்களும், மத்திய கல்லூரியில் ஆறாம் ஆண்டுமுதல் க. பொ. த. உயர் வகுப்புவரை 557 மாணவர்களும் கற்கின்றனர். இவ்விரு பாடசாலைகளிலும் முறையே 22 ஆசிரியர்களும், 34 ஆசிரியர்களும் கடமையாற்று கின்றனர். மேலதிகமாக ஐந்து தொண்டர் ஆசிரியர்கள் சேவையில் அமர்த்தப்பட் டுள்ளார்கள்.
உள்ளனர்.


ஸாஹிரா மகா வித்தியாலயம்
வெலிகம நகரிலிருந்து சுமார் இரண்டு கி. மீ. தூரத்திலுள்ள முஸ்லிம் கிராமமான வெலிப்பிட்டியவில் இப்பாடசாலை அமைந்துள்ளது. 1938 ஆம் ஆண்டு முப்பத்தெட்டு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் தலைமை யாசிரியராக இக்கிராமத்தைச் சேர்ந்த மர்ஹாம் அல்ஹாஜ் ஓ. எஸ். எம். றவுப் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஜனாப் எம். ஏ. எம். அவுப், அஸ்ஸெய்யித், வை. எல். எம். மவ்லானா, அல்ஹாஜ் எம். எச். முஹம்மது ஆகியோர் தலைமையாசிரியர்களாயிருந்தபோது படிப்படியாக பாடசாலை மாணவர் வரவும் அதிகரித்துக் கொண்டே வந்தது. மர்ஹாம்களான எம். பீ. எம். ஸஹிது, எம். ஐ. ஸெய்னுலாப்தீன், அல்ஹாஜ் எம். சி. முஹம்மது ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றியபோது இப்பாடசாலையின் பரீட்சைப் பெறுபேறுகள் முன்னேற்ற
மடைந்தன. ஜனாப் எம். ஐ. எம். முஹ்ளின் (1966 - 1976) ஜனாப் எம். பி. முஹம்மது (1977 - 1988) ஆகியோர் காலத்திலும் ஏனைய பாடசாலைகளுடன் போட்டியிடுமளவிற்கு இதன் கல்வித்தரம் வளர்ச்சியடைந்தது. தற்போது நான்கு பாடசாலைக் கட்டிடங்களைக் கொண்டதாகவும் சிறிய விளையாட்டுத்திடலைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. 1988 முதல் இதன் அதிபராக ஜனாப் எம். எம். ராஸிக் கடமையாற்றி வருகிறார். இது மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப் பட்டதுடன் க. பொ. த. உயர்தர வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சக உதவியாசிரியர்களின் ஒத்துழைப்பில் பாடசாலை துரித முன்னேற்றமடைந்து வருகிறது.
இங்கு 583 மாணவர்களும் 27 ஆசிரியர்களும் உள்ளனர்.


வெலிகமையில் முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகா பராக்கிரமபாகு காலத்தில் மானாபரன் உருகுணைப் பிரதேசத்தில் தன்பலத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தபோது மன்னனின் படைகள் சில வருடகாலம் யுத்தம் புரிய வேண்டியிருந்தது. வெலகல பகுதியில் மன்னனின் படைகள் யுத்தத்துக்காக வந்தபோது இங்கு வாழ்ந்த - "வாணிஜயோ" என்ற இனத்தவர் யுத்தம் நடைபெறாது தடுத்தனர் என்று வரலாறு கூறுகின்றது. இந்த வாணிஜயோ இனத்தவர்கள் முஸ்லிம்களே.
வெலிகம ஒரு சிறந்த துறைமுகக்குடாவைக் கொண்டுள்ளது. கிழக்கிந்திய வர்த்தகக் கப்பற் பாதையில் இது அமைந்திருப்பதால் அராபிய வியாபாரிகள் இங்கு குடியேறி வாழ்ந்திருக்கலாம்.
திக்குவல்லை, கந்தறை போன்ற கிராமங்களில் முதலில் குடியேறிய முஸ்லிம் கள் நெவிநுவரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். போர்த்துக்கீசர் காலத்தில் முஸ்லிம்கள் அங்கிருந்து துரத்தப்பட ஒரு பகுதியினர் திக்குவல்லையிலும், மறுபகுதியினர் கந்தறைக்கண்மையிலுள்ள ஜாகவத்தையிலும் குடியேறினர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கந்தறையில் குடியிருப்பை ஏற்படுத்திக்
கொண்டனர்.


0 Comments:

Post a Comment