Saturday, June 30, 2018

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் (வெலிகம) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட  சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் (வெலிகம) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
அவரிடம் இருந்து 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.


கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 37 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


வெளிநாட்டில் இருந்து வந்த பிரயாணி ஒருவர் இவர்மூலம் இதனை கடத்த முயற்சி செய்திருக்கலாம் என தெரிய வருகிறது.

Metronews.

Read more »

Friday, June 29, 2018

இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலை குறைக்கப்படுகிறது
சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரியவாயு 138 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் எரிவாயுவின் விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Read more »

Wednesday, June 27, 2018

இன்று வெலிகம பிரதேச முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம்

இன்று வெலிகம பிரதேச  முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம்.


இன்று வெலிகம பிரதேசத்தில் புதியதெரு பள்ளிவாசலுக்கு முன்னாள் ஜன்சல் விருந்து உபசாரம் முஸ்லீம்கலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்ததும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்லமையும் குறிப்பிடத்தக்கது.

Read more »

Tuesday, June 26, 2018

காதான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது

தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மஹா பஸ் கிரானில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் பயணம் செய்தவர்களில் சிலர் மரணித்துள்ளதுடன் பஸ்ஸில் பயணம் செய்த சிலர் காயமடைந்துள்ளனர்.
Read more »

Wednesday, June 20, 2018

மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தொழிற்சங்கப் போராட்டங்கள்!

இலங்கை தபால் சேவை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வேலைநிறுத்தத்தில் தபால் சேவையைச் சேர்ந்த 23 தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டுள்ளன. இதன் விளைவாக நாடெங்கிலும் தபால் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதேவேளை இவ்வேலைநிறுத்தம் காரணமாக நாடெங்கிலும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட தபால் பொதிகள் தபாலகங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் நாளொன்றுக்கு 17 கோடி ரூபா நஷ்டத்திற்கு அரசாங்கம் முகம் கொடுத்து வருவதாகவும் தபால் மாஅதிபர் ரோஹண அபேரட்ன தெரிவித்திருக்கின்றார்.
இது ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உரிய அறிவிப்பாகும். நாளொன்றுக்கு 17 கோடி ரூபா நஷ்டம் என்பது மிக இலேசான விடயமல்ல. இது நாட்டுக்கு இழைக்கப்படும் நஷ்டமாகவே கருதப்பட வேண்டும். அதனால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி இவ்விடயத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது அவசியமான விடயமாகும்.
என்றாலும் தபால் மாஅதிபர், 'தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைக் கோரிக்கை நியாயமானது என்றும் அவற்றுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
தபால் மாஅதிபரின் இந்த அறிவிப்பை நோக்கும் போது தபால் சேவை ஊழியர்கள் இவ்வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க முன்னர் தபால் மாஅதிபருடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
அதேநேரம் தபால் மாஅதிபர் இவ்வாறு அறிவித்துள்ள போதிலும் கூட அதனையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமெனக் கோரி மத்திய தபாலகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
தபால் மாஅதிபர் தபால் ஊழியர்களின் கோரிக்கையை நியாயமானது என்றும் ஒரு மாதத்திற்குள் தீர்த்து வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கையில், இவர்கள் ஜனாதிபதி செயலாளரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊர்வலம் நடத்தியுள்ளனர். அப்படியென்றால் இவர்கள் தமக்குப் பொறுப்பான தபால் மாஅதிபரின் அறிவிப்பை பொருட்படுத்தவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. இதனை ஒரு ஆரோக்கிய நடவடிக்கையாகவும் நோக்க முடியாது.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சொல்லக் கூடிய பதிலையே தபால் மாஅதிபர் இவ்வாறு கூறி இருக்கவும் முடியும் .
அதேநேரம் தபால் சேவை ஊழியர்களைப் போன்று ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் தமது நிறுவனத்திற்குப் பொறுப்பான தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலாளருடன்தான் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று புறப்பட்டால் நிலைமை என்னவாகும். அதனால் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கையை நியாயமானதாக நோக்க முடியாது.
மேலும் இந்த தபால் சேவை ஊழியர்கள் கொழும்பு மத்திய தபாலகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் காரணமாக கொழும்பின் இதயமாக விளங்கும் புறக்கோட்டை, கோட்டை உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிகள் பஸ் வண்களிலும் வாகனங்களிலும் பல மணித்தியாலயங்கள் காத்திருந்தனர். மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
கொழும்பின் இதயமாக விளங்கும் பகுதியில் தாம் முன்னெடுக்கும் ஆர்பாட்ட ஊர்வலம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர், அசௌகரியங்களுக்கு உள்ளாவர் என்பதை இந்த தொழிற்சங்க ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் தொழிற்சங்கங்கள்தான் இலங்கையில் காணப்படுகின்றன. இதற்கு தபால் சேவை ஊழியர்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதை வெளிப்படுத்தி விட்டனர்.
இவ்வாறான பின்புலத்தில்தான் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சகல ஊழியர்களும் உடனடியாக கடமைக்குத் திரும்ப வேண்டும் என்றும் தபால் மாஅதிபரினால் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கடமைக்குத் திரும்பாதவர்கள் வேலையிருந்து நீங்கியவர்களாகக் கருதப்படுவர் என்றும் அவர் அறிவித்திருக்கின்றார். இந்தப் பின்னணியில் தபால் சேவை ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமேயொழிய மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆகவே தபால் சேவை ஊழியர்கள் தமது கோரிக்கைக்கு நியாயமாக முறையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி தம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேட முயற்சிக்கலாகாது. அதில் எவ்விதத்திலும் நியாயம் காண முடியாது.
Read more »

இலங்கையின் தலை சிறந்த கணித மேதை நிஸ்பஹான் வெலிகம அறபா பாடசாலையில்

இலங்கையின் தலை சிறந்த கணித மேதை (ITN youth with talent)Nisfahan இன் நிகழ்ச்சி இன்று வெலிகம அறபா தேசிய பாடசாலையில் இடம்பெற்று வருகின்றது.இந்த நிகழ்ச்சியானது பாடசாலை மாணவர்களுக்காக மாத்திரம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது பாடசாலை மாணவர்கள் கணித அறிவை கற்க ஆர்வம் ஊட்டும் வகையிலேயே இன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
Read more »

Thursday, June 14, 2018

பாடசாலை செல்லும் பருவத்தில் தொழில் புரிய வேண்டிய அவலம்


பாடசாலை செல்லும் பருவத்தில் தொழில் புரிய வேண்டிய அவலம்
உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.சிறுவர் தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இன்றைய தினம் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒருபுறம்குழந்தைகள் புத்தகப் பையுடன் பாடசாலை செல்வதைப் பார்க்கும் போதுமகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றொருபுறம்சில குழந்தைகள் பாடசாலை செல்ல முடியாமல்தொழில் பார்ப்பதைப் பார்க்கும் போது வருத்தம் ஏற்படுகிறது.
இக்குழந்தைகளின் மனதிலும் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். வறுமைபெற்றோர் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறி விடுகிறது.
இப்படிப்பட்ட குழந்தைத் தொழிலாளர் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகளவில் 21.5 கோடி சிறுவர்கள்முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர். பாடசாலைக்குச் செல்ல முடியாமலும்மற்றக் குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். பெரும்பாலானோருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. சிறார்களாக இருக்க இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும்கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். சில நாடுகளில் போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ)எந்த வயதில் தொழில் பார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படிகடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள்இலேசான தொழில் பார்க்கலாம் (அவர்களது கல்விசுகாதாரம்மனம்பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்) . பெரும்பாலான குழந்தைகள்குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான்கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். முதலில் இவர்களின் பெற்றோர் வருமானத்துக்கு சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்தால்குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும்.சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத நாடாக அனைத்து நாட்டையும் மாற்றலாம். மனதில்ஆயிரம் ஆசைகளை சுமந்து கொண்டு பாடசாலைக்குச் செல்லும் மற்றக் குழந்தைகளைஇவர்கள் ஏக்கத்துடன் பார்ப்பது யாருக்குத் தெரியும்?
இதனால்சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். பல இடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளம் கொடுத்துகொத்தடிமைகளாகவும் நடத்தப்படுகின்றனர். இது சமுதாயத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
இலங்கைச் சிறுவர்களில் 90.1 சதவீதமானவர்கள் மாத்திரமேபாடசாலைக்குச் செல்வதாக மதிப்பிடப்படுகிறது.
இலங்கையில்கட்டாயக்கல்வி நடைமுறை காணப்படும் நிலையில்,எதற்காக இவ்வாறு சிறார்கள் தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது. வறிய மாணவர்கள்அடிப்படையான கல்வியைக் கூடக் கற்றுக் கொள்ள முடியாத அளவுக்குஅவர்களுக்கான சவால்கள் காணப்படுகின்றன என்பது இங்கு தெளிவாகத் தெரிகிறது. இதற்கு இலங்கையில் இடம்பெற்ற போரும்முக்கியமான காரணமாக அமைந்தது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவலின்படிஉலகில் சிறுவர் தொழிலாளர்களாக உள்ளோரில் பெரும்பான்மையானோர் முரண்பாடுவன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே வசிக்கின்றனர்.

நன்றி தினகரன்

Read more »

Sunday, June 10, 2018

நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? அப்ப இத கண்டிப்பா படிங்க

நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? அப்ப இத கண்டிப்பா படிங்க...
மனிதருக்கு இருக்கும் பழக் கங்களிலேயே நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். ஆய்வு ஒன்றில் 18 வயதிற்கு மேல் நகம் கடிக்கும் பழக்கம் கணிசமாக குறைவதாக செல்லப்படுகிறது. ஏன், நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று தெரி யுமா? நகம் கடிக்கும் பழக்கம் ஏன் மிகவும் மோசமானது என்று தெரியுமா? ஏனெனில் நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடக்கூடும்.

நகங்கள்

நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால், கை மொட்டையாகவும் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருப்பதோடு, சிவப்பாகவும் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.

சருமம்

நகங்களைக் கடிப்பதால், நகங்கள் இல்லாமல் இருப்பதோடு, நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஊறி, அங்கு தோலுரிய ஆரம்பித்து, அதனால் அவ்விடத்தில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

செரிமான மண்டலம்

நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள். இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானமாகாது. வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்
Read more »

Saturday, June 9, 2018

தொப்பையை கரைக்க இலகுவான வழிகள்

தொப்பையை கரைக்க இலகுவான வழிகள்
உங்களுக்கு நடுத் தர அளவில் தொ ப்பை இருந்தாலோ, மிகவும் பெரிதாக தொப்பை இருந்தா லோ அந்த கொ ழுப்பை குறைக்க இப்போதே முயற் சிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆரோக்கியமான காலை சிற்றுண்டி

தட்டையான வயிற்றை பெற உங்களது முதல் வழி இதோ! முட்டையின் வெள்ளை கரு பகுதி, பிரவுண் பிரட், காய்கறிகள், பாதாம், ஓட்ஸ் ஆகியவற்றை முழு தானியங்களாக உண்ண வேண்டும். இவற்றில் உள்ள உயர்ந்த சத்துக்கள் மற்றும் கடினமான கார்போஹைட்ரேட் ஆகியவை உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றன. இதனால் தட்டையான வயிற்றைப் பெற முடியும்.

தேவையான அளவு தண்ணீர்

பெரும்பாலான ஆண்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீரை குடிப்பதில்லை. நமது உடம்பை சுத்தப்படுத்தும் சக்தி தண்ணீருக்கு மட்டும் தான் உண்டு. உடம்பில் உள்ள தேவை இல்லாத கழிவுகளை வெளியே அனுப்பும் சக்தி கொண்ட பொருள் தண்ணீராகும். மீதமுள்ள மற்றும் செரிக்க முடியாத உணவு பொருட்களையும் தண்ணீர் வெளியே அனுப்பிவி டும். இத்தகைய செயல்களால் கொழுப்பு உடம்பில் சேர்வதை தவிர்க்க முடியும்.

தினசரி உடற்பயிற்சி

எளிமையான முறையில் ஓடுவது அல்லது நடப்பது போன்ற பயிற்சிகளை உடனடியாக ஆரம்பிப்பது நல்லது. உங்கள் மனதை இதற்காக தயார் செய்து கொள்வது நல்லது. இன்னொரு நாள் இதை செய்யலாம் என்று தள்ளிப் போட போட நம்மால் இத்தகைய செயல்களை செய்யாமல் போய் நம் முயற்சியில் தோற்றுவிடுவோம். 20 நிமிடங்கள் கார்டியோ மற்றும் 20 நிமிடம் கீழ் வயிற்றை குறைப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால் சில மாதங்களிலேயே மெல்லிய இடையை பெற முடியும்.

முழு தானியங்கள்

உணவு முறையைப் கவனிக்கும் போது காலை நேரங்களில் முழு தானி யங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. பழுப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ். ஆகிய தானியங்களை உண்பது சிறந்தது. இவை மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும், உடம்பில் இருக்கும் சக்தியை மெது மெதுவாக பயன்படுத்தவும் உதவுகின்றன. இதனால் நாம் வெகு நேரத்திற்கு பசியின்றி இருக்கக்கூடும். இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு குறையும்.

சீக்கிரம் இரவு உணவை உண்பது

தட்டையான வயிற்றுப் பகுதியை பெற இதுவும் ஒரு முக்கியமான செய லாகும். படுக்கைக்கு போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் உணவை உண்டால் அவை படுப்பதற்கு முன்பே செரித்துவிடும். இதனால் படுக்கும் போது வயிற்றில் செரிக்கப்படாத உணவேதும் இருக்காது. இவ்வாறு செரிக்கப்படாத உணவு வயிற்றிலேயே இருந்தால் அவை அதிக அளவு கொழுப்பை நமது வயிற்றுப் பகுதியில் சேர்த்து விடும் மற்றும் தொப்பையை உண்டாக்கும்.

பழங்கள் மற்றும் உலர் பழங்கள்

தட்டையான வயிற்றை பெறுவதில் பழங்கள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை நல்ல செரிமானத்தை உண்டாக்கி, மலச்சிக்கல்களை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவை உண்ட பின் குறைந்த கலோரிகள் நிறைந்த பிறசேர்க்கை உணவாக நமக்கு பயன்படுகின்றன. அந்தந்த காலத்தில் நமக்கு கிடைக்கும் பழங்களை நாம் உண்பதன் மூலம் நமக்கு தேவையான நார்ச்சத்தும் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி உடலில் நல்ல செரிமானம் ஏற்பட்டு கழிவுகளை எளிதாக வெளியேற்றவும் முடிகின்றது.
Read more »

சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் சமூக வலைத்தளங்கள்!


நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மனித வாழ்வு இயந்திரமயமாகி உள்ளது. புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்ற வசதி வாய்ப்புகள்தான் இந்நிலைமைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றன. அவை புதியபுதிய கண்டுபிடிப்புகளாகவும் விளங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் கண்டுபிடிப்புக்கள் இடம்பெறுவதோடு அவை புதியபுதிய உற்பத்திகளாகப் புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் இருக்கவே செய்கின்றன. அதனால் நன்மை பெறும் வகையிலேயே அனைத்தையும் பயன்படுத்த வேண்டி பொறுப்பு மனிதனுக்கு உள்ளது.
இப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் போது பல்வேறு விதமான சீரழிவுகளுக்கு முகம்கொடுக்கவே நேரிடும். இதற்கு தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளும் பாதிப்புகளும் நல்ல எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
தற்போது அபரிமித வளர்ச்சி பெற்றுள்ள தொடர்பாடல் துறை ஒரு காலத்தில் சமிக்ைஞ அடிப்படையில்தான்இடம்பெற்றது. இன்று இத்துறை அடைந்திருக்கும் உச்ச கட்ட வளர்ச்சியின் பயனாக உலகமே ஒரு பூகோளக் கிராமமாக மாறிவிட்டது.
தொடர்பாடல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் ஒரங்கமாக சமூக வலைத்தளங்கள் தற்போது புழக்கத்திற்கு வந்துள்ளன. அவற்றில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பிரித்தறிந்து பயன்படுத்துவது மிக அவசியமானது.இருந்தும் அவைதொடர்பில் பெரும்பாலானவர்கள் கவனம் செலுத்தாத நிலைமையே காணப்படுகின்றது.
அதனால் சமூக வலைத்தளங்களின் ஊடாக இடம்பெறும் மோசடிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் ஏமாற்றுதல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது. இன்றைய காலகட்டத்தில் மோசடிகளும், ஏமாற்றுகளும் அதிகளவில் இடம்பெறும் ஒரு இடமாகவே சமூகவலைத்தளங்கள் விளங்குகின்றன. அவை சமூகச் சீர்கேடுகளுக்கு பெரிதும் துணைபுரிந்து வருகின்றன. இந்நிலைமை நீடிப்பதும் அதிகரிப்பதும் சமூக ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.
இன்று சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. அவர்கள் மணித்தியாலக்கணக்கில் அவற்றிலேயே மூழ்கிப் போய் விடுகின்றனர். பக்கத்து வீட்டில் அல்லது தமக்கு அருகில் என்ன நடக்கின்றது என்பதைக் கூட அவர்கள் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு காணப்படுகின்றனர். இந்நிலைமை கண்பார்வைக்கும், உடல் உள ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.
அதேநேரம் பார்ப்பதற்கும் செவியேற்பதற்கும் பெரும் கட்டுப்பாடாகவும் தடையாகவும் இருந்த பல்வேறு விடயங்களை மிக இலகுவாகப் பார்க்கவும் செவியேற்கவும் கூடிய இடமாக இந்த சமூகவலைத்தளங்கள் காணப்படுகின்றன. இதன் விளைவாக சமூகப் பிறழ்வுகளுக்குள் இட்டுச் செல்லப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இச்சமூகவலைத்தளங்கள் ஊடாக முன்பின் அறிமுகமற்றவர்கள் நண்பர்களாவதும், நட்பு கொள்வதும் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்த நட்பு பல்வேறு விதமான சீரழிவுகளுக்கு இட்டுச் செல்ல வழிவகுத்துள்ளது. அதாவது அண்மையில் ஒரு இளம் யுவதி ஆணொருவருடன் சமூக வலைத்தளம் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்நட்பு சொற்ப காலத்தில் திருமண பந்தத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது. ஆனால் குறித்த ஆண் திருமணமானவர் என்பதை திருமணத்தின் பின்பே அந்த யுவதியினால் அறிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல பதிவாகியுள்ளன.
இதேவேளை தினசரி ஊடகங்கள் அண்மையில் முக்கியத்துவம் அளித்த செய்திகளில் ஒன்றுதான் 'சமூக வலைத்தளத்தின் ஊடாக தோழமை ஏற்படுத்திக் கொண்ட பெண்மணியொருவர் ஒரு வார காலத்தில் 15 இலட்சம் ரூபாவை இழந்துள்ளார்' என்பதாகும்.
மேலும் சமூகவலைத்தளம் பாவிக்கும் மனைவிக்கு அதன் பாவனை தொடர்பில் கணவன் தெரிவித்த கூற்றினால் அப்பெண்மணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு ஏகப்பட்ட சீரழிவுகளைத் தோற்றுவித்துள்ள சமூகவலைத்தளங்கள் வன்முறைகளுக்கும் கூட துணைபுரியக் கூடியனவாக உள்ளன. குறிப்பாக கண்டி, தெல்தெனிய, திகன வன்முறைச் சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள்தான் அடிப்படைக் காரணமாக அமைந்தன. அதனால் இவ்வன்முறையைக் கட்டுப்பாட்டு நிலைக்குள் கொண்டு வருவதற்காக சமூகவலைத்தளங்களை சில நாட்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை கூட அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
இவை ஒருபுறமிருக்க, மாணவர்களின் சமூகவலைத்தளப் பாவனையும் பெரிதும் அதிரித்துள்ளது. அதனால் பருவத்தை மீறிய பழக்கவழக்கங்களுக்குள் தள்ளப்படக் கூடிய அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக அதீத கன உலகிற்குள் அவர்கள் தள்ளப்படுகின்றனர்.இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.
ஆகவே தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் தீங்கையோ கெடுதல்களையோ ஏற்படுத்தாத வகையில் சமூக வலைத்தளங்கள் பாவிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கமும் சமூக ஆர்வலர்களும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகளையும், முறைகேடுகளையும் சீரழிவுகளையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 
Read more »

Friday, June 8, 2018

லோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்


லோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்


கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo)
தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மின் உயர்த்தியில் மேலே செல்லும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Read more »

Wednesday, June 6, 2018

ஆண்கள் ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்திற்கு உங்கள் பெண் பிள்ளைகளை .படிப்பதற்க்கு அனுப்ப வேண்டாம்

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்.,,]

ஆண்கள் ஆசிரியர்கள்  பணிபுரியும்
இடத்திற்கு  உங்கள் பெண் பிள்ளைகளை .படிப்பதற்க்கு
அனுப்ப வேண்டாம் ,

தனியார் நிர்வாகமாக இருந்தாலும் சரி ,
அல்ல அரசு பள்ளியாக இருந்தாலும் சரி,

அப்படி அவர்கள் அனுப்ப பட்டால் ,
எந்த முறையில் அவர்கள் பள்ளியில்
நடத்த படுவார்கள் ,?

அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது ஆண் னா, பெண்ணா ?

அவளின் நண்பர்கள் யார் யார் .?

தினமும் எவ்வாறு பள்ளிக்கு செல்கிறாள் ,?

பள்ளியில் அவளுக்கு அனைத்து வசதியும் உள்ளதா ?

இப்படி சில விசயங்களை .நீங்கள் உங்கள் பெண் பிள்ளைகளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் .

காரணம் ?.
இன்று பல பள்ளிகளில்  பணியாற்றி
வரும் சில ஆசிரியர்கள் ,
படிக்க வந்த மானவி கிட்டே எவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என்பதை ,இனையதளம் மூலம் காண்கிறோம் .

ஆசிரியர் மானவிக்கு .காதல் கடிதம் கொடுக்கிறார் .
அதுவும் எப்படி சொல்லி
கொடுக்கிறார் என்றால் . நான் உன்னை காதலிக்கிறேன் .இந்த வருடம் உன்னை நான் பாஸ் ஆக்கிக்கிறேன் ,எனக்கு நீ.. ஒத்துழைப்பு கொடு என்று மிரட்டி.

இப்படி எதையாவது ஒன்றை .blackmail பண்ணிக் ,சில பிள்ளைகளை சீரழித்து விடுகிறார்கள்

சற்று சிந்தித்து பாருங்கள் ,
உங்கள் மகள்ளாக இருக்கட்டும் அல்ல உங்களின் கூட பிறந்த  சகோதரி யாக இருக்கட்டும் ,

உங்கள் வீட்டு பெண்
ஆண் ஆசிரியர்களிடம்  தான்
படிக்கனும் மா ,?

ஒரு பெண் மானவி அவளின் தனிப்பட்ட விசயத்தை எப்படி ஒரு ஆண்னோடு கேட்க படுவாள் ,அது அவளுக்கு மானக் கேடாக இருக்காதா ?

தந்தையிடம் கூட அவள் தனிப்பட்ட விசயத்தை கேட்க மாட்டாள் .

ஆனால் . அவள் பள்ளியை விட்டு வெளியில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றால்  கூட ஆசிரியர்களிடம் ,[பர்மிஷன்] கேட்டு தான் போக முடியும் .

அப்படி கேட்டுக் கொண்டு போகும் உங்கள் வீட்டு பெண்கள்  . தண்ணீர் அருந்த
மட்டும் அல்ல.
அவளின் அனைத்து விசயத்திற்க்கும் . அந்த ஆசிரியரிடம் தான் கேட்க வேண்டும் ,

உங்கள் ஊரில் பெண்ணுக்கு
 பெண் ஆசிரியர்
 பாடம் நடத்தக் கூடாதா ?

உங்க  பெண்  .வீட்டிலிருந்து அணிந்து செல்லும் புர்கா ,அதை போன்று தான் பள்ளியிலும் அணிந்து இருக்கிறாள் ளா .?

ஆண் ஆசிரியர்களிடம் கிஜாப் அணிந்து தான் பாடத்தை படிக்கிறார்களா ?

காலத்திற்கு தகுந்த மாதிரி ,மாற்றி கொள்ளுவதில் தவறு இல்லை,
அதை எந்த காரியத்திற்க்கு மாற்ற வேண்டும் என்பதை சற்று சிந்தியுங்கள் .

உங்கள் வீட்டை விட்டு உங்கள் பெண் வெளியில் செல்ல இறங்கிறாள் என்றாள் ,அவளிடத்தில் .நீங்கள் பக்குவம் மாக இக் காலத்தை பற்றி எடுத்துறைக்க வேண்டும் ,

உங்கள் வீட்டு பெண் ,நீங்கள் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கலாம் , தவறில்லை

ஆனால்  இக் காலத்தின் திருடர்கள் திறந்து கிடக்கும் வீட்டிநுல் க்கூட நுழைவதற்க்கு யோசிப்பார்கள்
ஆனால்  பூட்டுயே ,வீட்டின்னுல் நுழைய தயங்க மாட்டார்கள் ,ஏன் என்றால் விலையுயர்ந்த பொருட்களை தான் பூட்டி வைப்போம் ,அந்த விலையுயர்ந்த பொருள்கள் தான் என் சமுதாயத்தின் பெண்கள்  .

என் சமுதாயத்தின் பெண்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு படிக்கிறார்களோ அதைவிட ஒரு மடங்கு மேலே என் மார்க்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும் 

அவள் உடுத்தும் ஆடை ஒழுங்காக இருந்தாலும் சரி
அவளின்  தோழி மார்கல் நல்லவர்களாக இருந்தாலும் ,சரி

பெற்றோர்களாகிய நீங்கள் உங்களின் கடமை யை, உங்கள்  பிள்ளைகளிடம் எடுத்துறைத்து வாருங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு
படிப்பு முக்கியம் தான் .
அதற்கு முன்பு  அவர்களுக்கு மார்க்கத்தையும் பற்றி எடுத்துக் கூறுங்கள்

முடிந்தால் .பெண் பிள்ளைகளை .
ஆண் ஆசிரியர்களிடம் படிக்க வைப்பதை தவிர்த்து கொண்டு ,

பெண் ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இடத்தில் சேருங்கள்.
--------------------------------------------------------------
என் பதிவுகளில் உள்ள சில வரிகளுக்கும்
நான்  பதிய பட்ட போட்டோ க்கும் .சம்மந்தம் இல்லை . நான் பென் என்பதால் மற்ற பெண் களுக்கும் அவங்க பெற்றோர்களுக்கும் எடுத்துக்காட்டாக உங்களுக்கு இக் கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்  ,s,Aayisha Banu
Read more »

வெலிகம அறபா பாடசாலை புதிய அதிபர் நியமனம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கு இடையில் சிக்கல் நிலவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள்


வெலிகம அறபா பாடசாலையில் கடந்த பல ஆண்டு காலம் கடமையாற்றிய அதிபர் jswa moulana  ஓய்வு பெற்றதை அடுத்து புதிய அதிபராக அப் பாடசாலையில் உதவி அதிபராக கடமையாற்றிய முதஹ்ஹர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.
இவரின் நியமனம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர்கள்  மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சிலர் இணைந்து அப் பாடசாலையிலேயே கடமையாற்றும்அதாஹிம் ஆசிரியரை அதிபராக நியமிக்கும்படி தமது கருத்தை முன் வைத்துள்ளனர் இதனை அடுத்தே இரு குழுக்கள் இடையே சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது. என்றாலும் முதஹ்ஹர் ஆசிரியரே கல்வி அமைச்சினால்  அதிபராக நியமிக்கபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Read more »