நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? அப்ப இத கண்டிப்பா படிங்க

நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? அப்ப இத கண்டிப்பா படிங்க...
மனிதருக்கு இருக்கும் பழக் கங்களிலேயே நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். ஆய்வு ஒன்றில் 18 வயதிற்கு மேல் நகம் கடிக்கும் பழக்கம் கணிசமாக குறைவதாக செல்லப்படுகிறது. ஏன், நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று தெரி யுமா? நகம் கடிக்கும் பழக்கம் ஏன் மிகவும் மோசமானது என்று தெரியுமா? ஏனெனில் நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடக்கூடும்.

நகங்கள்

நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால், கை மொட்டையாகவும் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருப்பதோடு, சிவப்பாகவும் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.

சருமம்

நகங்களைக் கடிப்பதால், நகங்கள் இல்லாமல் இருப்பதோடு, நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஊறி, அங்கு தோலுரிய ஆரம்பித்து, அதனால் அவ்விடத்தில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

செரிமான மண்டலம்

நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள். இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானமாகாது. வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்