தொப்பையை கரைக்க இலகுவான வழிகள்

தொப்பையை கரைக்க இலகுவான வழிகள்
உங்களுக்கு நடுத் தர அளவில் தொ ப்பை இருந்தாலோ, மிகவும் பெரிதாக தொப்பை இருந்தா லோ அந்த கொ ழுப்பை குறைக்க இப்போதே முயற் சிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆரோக்கியமான காலை சிற்றுண்டி

தட்டையான வயிற்றை பெற உங்களது முதல் வழி இதோ! முட்டையின் வெள்ளை கரு பகுதி, பிரவுண் பிரட், காய்கறிகள், பாதாம், ஓட்ஸ் ஆகியவற்றை முழு தானியங்களாக உண்ண வேண்டும். இவற்றில் உள்ள உயர்ந்த சத்துக்கள் மற்றும் கடினமான கார்போஹைட்ரேட் ஆகியவை உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றன. இதனால் தட்டையான வயிற்றைப் பெற முடியும்.

தேவையான அளவு தண்ணீர்

பெரும்பாலான ஆண்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீரை குடிப்பதில்லை. நமது உடம்பை சுத்தப்படுத்தும் சக்தி தண்ணீருக்கு மட்டும் தான் உண்டு. உடம்பில் உள்ள தேவை இல்லாத கழிவுகளை வெளியே அனுப்பும் சக்தி கொண்ட பொருள் தண்ணீராகும். மீதமுள்ள மற்றும் செரிக்க முடியாத உணவு பொருட்களையும் தண்ணீர் வெளியே அனுப்பிவி டும். இத்தகைய செயல்களால் கொழுப்பு உடம்பில் சேர்வதை தவிர்க்க முடியும்.

தினசரி உடற்பயிற்சி

எளிமையான முறையில் ஓடுவது அல்லது நடப்பது போன்ற பயிற்சிகளை உடனடியாக ஆரம்பிப்பது நல்லது. உங்கள் மனதை இதற்காக தயார் செய்து கொள்வது நல்லது. இன்னொரு நாள் இதை செய்யலாம் என்று தள்ளிப் போட போட நம்மால் இத்தகைய செயல்களை செய்யாமல் போய் நம் முயற்சியில் தோற்றுவிடுவோம். 20 நிமிடங்கள் கார்டியோ மற்றும் 20 நிமிடம் கீழ் வயிற்றை குறைப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால் சில மாதங்களிலேயே மெல்லிய இடையை பெற முடியும்.

முழு தானியங்கள்

உணவு முறையைப் கவனிக்கும் போது காலை நேரங்களில் முழு தானி யங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. பழுப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ். ஆகிய தானியங்களை உண்பது சிறந்தது. இவை மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும், உடம்பில் இருக்கும் சக்தியை மெது மெதுவாக பயன்படுத்தவும் உதவுகின்றன. இதனால் நாம் வெகு நேரத்திற்கு பசியின்றி இருக்கக்கூடும். இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு குறையும்.

சீக்கிரம் இரவு உணவை உண்பது

தட்டையான வயிற்றுப் பகுதியை பெற இதுவும் ஒரு முக்கியமான செய லாகும். படுக்கைக்கு போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் உணவை உண்டால் அவை படுப்பதற்கு முன்பே செரித்துவிடும். இதனால் படுக்கும் போது வயிற்றில் செரிக்கப்படாத உணவேதும் இருக்காது. இவ்வாறு செரிக்கப்படாத உணவு வயிற்றிலேயே இருந்தால் அவை அதிக அளவு கொழுப்பை நமது வயிற்றுப் பகுதியில் சேர்த்து விடும் மற்றும் தொப்பையை உண்டாக்கும்.

பழங்கள் மற்றும் உலர் பழங்கள்

தட்டையான வயிற்றை பெறுவதில் பழங்கள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை நல்ல செரிமானத்தை உண்டாக்கி, மலச்சிக்கல்களை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவை உண்ட பின் குறைந்த கலோரிகள் நிறைந்த பிறசேர்க்கை உணவாக நமக்கு பயன்படுகின்றன. அந்தந்த காலத்தில் நமக்கு கிடைக்கும் பழங்களை நாம் உண்பதன் மூலம் நமக்கு தேவையான நார்ச்சத்தும் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி உடலில் நல்ல செரிமானம் ஏற்பட்டு கழிவுகளை எளிதாக வெளியேற்றவும் முடிகின்றது.