Breaking News

>

சவூதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்.. 4 பேர் உயிரிழப்பு



சவுதி அரேபியாவின் ரியாத் நகரின் வட பகுதி,  காஸிம் பிராந்தியத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது
நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

புரைதா தரபிய்யா வீதியிலுள்ள சோதனைச் சாவடி மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரியொருவரும், பங்களாதேஷ் நாட்டவர் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

No comments