எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படக்கூடிய சாத்தியம்


எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.


அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியல் பீட விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் எதிர்வரும் 4ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில்ஈடுபடவுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டால் பாடசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானதாக கூறி தகுதியற்ற 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த பதவி உயர்வுகளுக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது