78 வயது மகனை சுட்டுக் கொன்ற 92 வயது தாய்

அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற 78 வயது மகனை 92 வயது தாய் சுட்டுக் கொன்றுள்ளார்.
கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் அன்னா மே பிளசிங் என்ற அந்த தாய், தன்னை முதியோர் காப்பகத்தில் விடும் மகனின் நோக்கத்திற்காக கொலை செய்திருப்பதாக நீதிமன்ற ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
“நீ எனது உயிரை எடுத்தாய் எனவே, நான் உனது உயிரை எடுத்தேன்” என்று அந்த மூதாட்டியை அரிசோனாவில் இருக்கும் தனது விட்டில் வைத்து கைது செய்யும்போது குறிப்பிட்டுள்ளார். அவர் தனது மகன் மற்றும் அவரின் காதலியுடனேயே அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். தனது தாயால் சாதாரண வாழ்க்கையை முன்னெடுப்பதில் கடினம் இருப்பதாலேயே அவரை பராமரிப்பில் முதியோர் காப்பகத்தில் வீடுவதற்கு மகன் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பில் மகனுடன் சண்டை ஏற்பட்டபோது அந்த மூதாட்டி தனது சட்டை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு தடவைகள் சுட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கழுத்து மற்றும் தாடை பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்திருந்த மகனை பொலிஸார் மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தனது மகனின் 57 வயது காதலியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபோது அவர் தப்பியோடியுள்ளார்.