Breaking News

>

இலங்கையில் புதிய எரிபொருள் அறிமுகம் - டீசல் மற்றும் பெற்றோல் பழைய விலையில்.


கனியவளத்துறை அமைச்சு இலங்கை சந்தைக்கு புதியவகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கமைய குறித்த அமைச்சு யுரோ 4 என்ற புதிய வகை எரிபொருளையே இன்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது.
சூழலுக்கு மாசு ஏற்படுவதனை குறைக்கும் நோக்குடன் குறித்த எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
யுரோ 4 தர பெற்றோல் மற்றும் யூரோ 4 டீசல் ஆகியவற்றை பழைய விலைக்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் யூரோ 5 மற்றும் யூரோ 6 ஆகிய எரிபொருள் வகைகளையும் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

யுரோ 4 எரிபொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

No comments