பேராதனை பொறியியல் பீடத்திற்கு பூட்டு

மீள அறிவிக்கும் வரை, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், 80% வரவை பூர்த்தி செய்யாமை காரணமாக அவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்காமை தொடர்பில், மாணவர்கள் அமைதியின்றி செயற்பட்டதனால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உப வேந்தர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய இன்று (17) பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கல்வி சாரா ஊழியர்கள் இரு மாதங்கள் மேற்கொண்ட பணி புறக்கணிப்பு காரணமாக, தங்களது 80% வரவு பாதிக்கப்பட்டதாக, பேராதெனிய பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் மஹீல் பண்டார தெஹிதெனிய தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.