Breaking News

>

பலஸ்தீன போராளிகள் குடும்பங்களின் நிதியை முடக்க இஸ்ரேலில் புதிய சட்டம்

பலஸ்தீன போராளிகள் குடும்பங்களின் நிதியை முடக்க இஸ்ரேலில் புதிய சட்டம்


இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் சிறையில் இருக்கும் பலஸ்தீன குடுபம்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை தடுப்பதற்கு பலஸ்தீன அதிகார சபையின் பெரும் தொகை பணத்தை முடக்க இஸ்ரேல் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
பலஸ்தீன அதிகார சபை சார்பில் ஒவ்வொரு மாதமும் சேகரிக்கப்படும் வரி வருவாயில் 130 மில்லியன் டொலர்களை நிறுத்தி வைப்பதற்கே இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
“இந்த கொடுப்பனவு தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக இருக்கிறது” என்று இந்த நிதியை முடக்குவதற்கு ஆதரவளித்த இஸ்ரேல் எம்.பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் கைதிகள் மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கான நலன்புரி நிதியம் இது என்று பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்்த நிதிக்கு பலஸ்தீன அதிகார சபையின் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 7 சதவீதமான 330 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஊதியம் மற்றும் சலுகைகளாக வழங்கப்படுகிறது.
1990களில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேல் தனது நிலப்பரப்பின் ஊடாக செல்லும் பொருட்களுக்கு பலஸ்தீன அதிகார சபை சார்பில் வரி விதிக்கவும் மற்றும் சுங்க வரிகள் விதிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் 15க்கு 87 வாக்குகளால் ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
இதில் பலஸ்தீன அதிகார சபை இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு நிகரான தொகையை முடக்குவதற்கு இஸ்ரேல் அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதனை ஒரு ஆபத்தான முடிவு என்று எச்சரித்திருக்கும் பலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகத், இதனை ஒரு திருட்டு என்று குறிப்பிட்டார்.

No comments