கைதான பெண்ணுக்காக ஈரானியர் நடனமாடி ஆதரவு



ஈரானில் நடனமாடிய பதின்ம வயது பெண் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்டு பலரும் நடனமாடும் வீடியோக்களை இணையத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்ஸ்டகிராமில் ஆயிரக்கணக்கானோரின் ஆதரவை பெற்ற மேதிஹ் ஹொஜபரி என்ற பெண் ஈரானிய மற்றும் மேற்கத்தேய பொப் பாடல்களுக்கு நடனமாடும் வீடியோவை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொஜபரியின் வாக்குமூலம் கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் அரச தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடமாடுவது குற்றமல்ல என கூறும் பலரும் ஹொஜபரிக்கு ஆதரவாக தாம் நடமாடும் வீடியோக்களை இணையத்தளத்தில் வெளிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து நடமாடிய மேலும் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பெண்களின் ஆடை மற்றும் எதிர்ப்பாலினருடன் நடமாடுவது குறித்து ஈரான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
எனினும் நடனமாடியதற்காக ஈரானில் கைது செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து மஷ்ஹாத் நகரில் பலரும் கைது செய்யப்பட்டனர்.