Breaking News

>

சுற்றுலா சென்று படகு மூழ்கியதில் அதிபர் உள்ளிட்ட இருவர் பலி





அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலையிலிருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் 09 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலையின் அதிபர், மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பதுளை, கந்தன சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுள்,  பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 09 பேர், அம்பாறை, தமணவிலுள்ள எக்கல்ஓயவில் படகில் சென்றுள்ளனர்.
இதன்போது படகு கவிந்ததில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்களால் அதிலிருந்த 05 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, பாடசாலையின் அதிபர் (53), ஆசிரியர் (43), காவலர் (31) மற்றும் மாணவர் ஒருவர் (13) உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளனர்.
இன்று (08) காலை, இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது, பிற்பகல் அளவில் குறித்த பாடசாலையின் அதிபர் டி.எஸ். அமரசூரிய (53) மற்றும் தாருக்க விதர்ஷன (13) எனும் மாணவனின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் ஆசிரியர் (43), அப்பாடசாலையின் காவலாளி (31) ஆகியோரை தேடும் பணி தொடர்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

No comments