அமித் வீரசிங்க உள்ளிட்ட முக்கிய சந்தேக நபர்கள் பிணையில் வெளியே வந்தனர்


இன்று -09- அவர்களுக்கு எதிராக தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அமித் உள்ளிட்ட 10 பேருக்கு 5 லட்சம் ரூபா பெறுமதியான 3  சரீர பிணை  மற்றும் 5000 ரூபா ரொக்கம் செலுத்தி   பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமித் வீரசிங்க மீது இன்னும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றில் சிலவற்றுக்கு  அவருக்கு இதுவரை பிணை வழங்கப்படாத நிலையில் அவற்றுக்கும் அவருக்கு விரைவில் பிணை கிடைக்கும் என தெரியவருகிறது.
தற்போது அவருக்கு முக்கியமான வழக்கொன்றிலேயே அவருக்கு பிணை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.