வெலிகம பிரதேச புத்தி ஜீவிகளே இது உங்கள் கவனத்திற்கு.

வெலிகம பிரதேச அபிவிருத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் எங்கே??
காலா காலம் வெலிகம பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய என பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அந்தவகையில் கல்வி கலை கலாசாரம் மார்க்கம் என்ற ரீதியில் பல அமைப்புக்கள் உருவாகின.அதில் ஒரு சில வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட வெலிகம அபிவிருத்தி அமைப்பு குறிப்பிடத்தக்கது எமது வெலிகம பிரதேசத்தை முன்னேற்ற முயற்சியை பாராட்டுகின்றோம் .

என்றாலும் அதின் ஆரம்ப செய்ற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றாலும் பின் செயல்இழந்த அமைப்பாக உள்ளமை கவலைக்கு உரியதே அமைப்பில் ஏற்பட்ட குழப்ப நிலையை சுருக்கமாக
வெலிகம பிரதேச அபிவிருத்தி அமைப்பானது வெலிகம பிரதேச கல்விமான்கள், தனவந்தர்கள்,சமூக நலன் விரும்பிகள் என்று பலர் அங்கத்துவம் வகித்தனர். ஆரம்ப நிகழ்வானது கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் யூசுப் முப்தி உட்பட ரைன்கோ உரிமையாளர் , வெலிகம பிரதேச புத்தி ஜீவிகள், தனவந்தர்கள்,நலன் விரும்பிகள் என்று பலர் கலந்துகொண்டார்கள்.
இதில் வெலிகம பிரதேச தொடர்பான பல பிரச்சினைகள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.வெலிகம பிரதேச சூழ்நிலைகள் அடங்கிய ஒரு காணொளிய அதில் காண்பிக்கப்பட்டது .



இந் நிகழ்வில் சுமார் மூன்று + கோடி ரூபாய் அளவில் வசூல் சேகரிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
என்றாலும் சேகரிக்கப்பட்ட பணம் செலவிடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் பின் இவ் அமைப்பானது செயற்திறன் அற்ற அமைப்பாக மாற காரணமானது
அதில் குறிப்பாக புதிய தெரு பிரதேசத்தில் முஸ்லீம் நபர் ஒருவருக்கு சொந்தமான வீடு சிங்கள ஒருவருக்கு ஈடு வைக்கப்பட்டிருந்தது அதை மீண்டு பெற வேண்டும் முஸ்லீம்களின் பிரதேசங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுக்க முடியாது என்று ஒரு சாரார் கூற இன்னொரு சாரார் இதை விட பல பிரச்சினைகள் வெலிகம பிரதேசத்தில் காணப்படுகின்றது அந்த பிரச்சினைகளில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பல கோஷங்கள் எழுப்பப்பட்டன
இவ்வாறான பல பிரச்சினைகள் ஏற்பட சங்க செயற்பாடுகளின் ஆர்வம் அங்கத்தவர்கள் மத்தியில் குறைவடைந்து செயற்பாடுகள் அற்ற சங்கமாக மாறியது
சமூக சேவை என்பது மதம் ,ஜாதி பார்தோ அல்லது கொள்கை பார்தோ செய்ய கூடியது அல்ல சங்கத்தில் பிளவு ஏற்பட இந்த கொள்கை ரீதியான பிரச்சினைகளும் காரணமாக அமைத்துள்ளமையும் மிகவும் கவலைக்குரிய விடயமே
அதே வேளை சேகரிக்கப்பட்ட பணம் முறைகேடான முறையில் கை மாற்றுக்காகவும் கொடுக்கப்பட்டு சிலர் மீண்டும் திரும்பி தராமல் இருப்பதாகவும் அறியமுடிகின்றது . இன்னும் சிலர் சேகரிக்கப்பட்ட பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்ய தருமாறு கேற்பதாகவும் அறியமுடிகின்றது.சிரமத்திற்கு மத்தியில் வசூலிக்கப்பட்ட பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பதில் பிரச்சினை இன்னும் தீரவில்லை


பொதுவாக பல அபிவிருத்தி சங்கங்கள் பணப்பற்றாக்குறை காரணமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது என்றாலும் வெலிகம அபிவிருத்தி சங்கம் பணம் இருந்தும் அதை செலவு செய்ய முடியாத நிலையில் வீண் பிரட்சினைகளுக்கு மத்தியில் உள்ளமையும் கவலைக்குரிய விடயமாகும்.


சமூகசேவைகள் செய்ய வேண்டும் என்று சேகரிக்கப்பட்ட பணம் முறைகேடாக பயன்படுத்தி இருந்தால் அதற்கான அபிருத்தி சங்கத்தில் உள்ள அனைவரும் பொறுப்புதாரிகள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதற்கான கூலியை கண்டிப்பாக நீங்கள் மறுமையில் பெறுவீர்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
விழிப்புடன் காத்திருக்கின்றோம். சங்க செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று.


முதல் கூட்டத்தில் கிடைத்த பணத்தை வெலிகம பிரதேசத்தில் உள்ள மஹல்லா பள்ளிவாசல் பொறுப்பு அதிகாரிகளிடம் பிரித்து கொடுத்து இருந்தாலும் அப்பிரதேசம் ஓர் அளவிற்கேனும் அபிவிருத்தி அடைந்திருக்கு.என்று நம்புகின்றோம்


இவற்றுக்கான பொருப்பளிகள் யார்?
சங்க செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கபப்படுமா??
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வாயாக.வெலிகம அபிவிருத்தி செயற்பாடுகள் சிறந்த முறையில் நடைபெற்று எமது ஊர் எல்லா துறையிலும் முன்னேறிய பிரதேசமாக மாற அருள் புரிவாயாக.


வெலிகம பிரதேச புத்தி ஜீவிகளே இது உங்கள் கவனத்திற்கு.


Admin
www.weligamanews.com
WhatsApp: 07 66 55 44 36