Friday, August 31, 2018

18 வயது இளைஞன் வீட்டு வளாகத்தில் வைத்து யானை தாக்குத்தலுக்கு உள்ளாகி ஸ்தலத்திலே​யே பலி.


றாணமடு மாலையர்கட்டு கிராமத்தில், இன்று (31) அதிகாலை காட்டுயானை தாக்கி, 18 வயதுடைய,
சிவலிங்கம் லயனிதன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
Read more »

இள வயதுத் திருமணமும் அதன் விளைவுகளும் சம்மந்தமான செயலமர்வு.

திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கிராம
சேவகப் பிரிவில் இள வயதுத் திருமணமும் அதன் விளைவுகளும் சம்மந்தமான உளவளத்துணை செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
Read more »

மியன்மாரில் கடும் வெள்ளம்... பல்லாயிரக் கணக்கானோர் ஊர்களில் இருந்து வெளியேறினர்.


மியன்மாரின் மத்திய பிராந்தியத்தில் அணை உடைந்ததால் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தையடுத்து,
63,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Read more »

நாமல் பேபியின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகை ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனம் !!


நாமல் பேபியின் லம்போகினி பற்றிவிமர்சித்தவர்கள் அலரி மாளிகைஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாகஇருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானககுறிப்பிட்டார்.
Read more »

வவுனியாவில் பெண்கள் ஆர்பாட்டம் !!இணைய தளங்களில் பெண்களின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வதை தடை செய்ய வேண்டும்
என பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
Read more »

“என் உளக் காயங்களையும் சேர்த்தே தைக்கிறேன்” லெபனானில் முகாமில் வாடும் சிரிய அகதிகளின் கண்ணீர் .


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (மூலம்: Middle East Eye)-
“வான் தாக்குதலில் எமது வீடு
தரைமட்டமாகி விட்டது... இருப்பினும், நானும் எனது பிள்ளைகளும் மயிரிழையில் உயிர் பிழைத்தோம்...
Read more »

தந்தை மற்றும் மகள் சடலமாக மீட்பு.. உடலில் இருந்து கிருமிநாசினி வாசம்.


மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த தந்தை மற்றும் மகளின்
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
Read more »

Thursday, August 30, 2018

எச்சரிக்கை – சில பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்…


திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களிலும் ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
Read more »

விடுதலைப்புலிகளை தோற்கடித்த போர்த்தந்திரங்களை பல நாடுகளுக்கும் கற்றுக் கொடுக்கும் போர்ப்பயிற்சி முகாம் ஸ்ரீலங்காவில்……

சிறிலங்கா இராணுவத்தினரால் ஒன்பதாவதுதடவையாகவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நீர்காகம் போர்ப் பயிற்சிகள் செப்டெம்பர் ஆறாம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை மின்னேரியா மற்றும் திருகோணமலை குச்சவெளிப் பகுதிகளில் நடைபெறவுள்ளன.
Read more »

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர்….

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Read more »

வாட்ஸ் ஆப் சிக்கலில் இருந்து, தப்புவது எப்படி..?

உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன. இதில் தவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Read more »

முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இரகசிய பேச்சுவார்த்தை.


-ஏ.ஆர்.ஏ.பரீல்--
அரசியல் களநிலைமை ஸ்திரமற்ற தன்மையை அடைந்துள்ள
நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிர்கால அரசியல் தொடர்பில் பேச்சுவார்த்தை
நடாத்திவருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
Read more »

ரஷ்யா MMA குத்துச்சண்டையில் இரு வெள்ளிப் பதக்கம் வென்ற தோப்பூர் அஸாதுக்கு வாழ்த்துக்கள்.


ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.ஏ. (Mixed Martial Arts ) குத்துச்சண்டை போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை
வென்ற தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாதை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்தி கௌரவித்தார்.
Read more »

Wednesday, August 29, 2018

#Breaking news ஏறாவூரைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்


சற்றுமுன் 
ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் தோனியில் சென்ற மூன்று  மாணவர்களில் தோணி கவிழ்ந்ததால்  நீரில் மூழ்கி இருவர் மரணம்.
Read more »

தென் பசுபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் : சிறய அளவில் சுனாமி அலைகள் மேலெழுந்துள்ளன

தென் பசுபிக் கடற்பகுதியான கலேடோனியாவில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சாதாரண நிலையை விட 7 அங்குல உயரத்தில் சுனாமி அலைகள் மேலெழுந்ததாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இது வரை எது விதமான பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை

Read more »

திருகோணமலை துறைமுகத்தை குறி வைக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான்…………பங்களாதேஷ் ஊடகம் தெரிவித்துள்ளது.இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை சீனாவைவிட ஜப்பானும், அமெரிக்காவும் குறி வைக்கின்றன என்று பங்களாதேஷ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
Read more »

அணு இல்லா உலகம் படைப்போம் இன்று சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்……..அணுவின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதே நேரத்தில் அணு ஆயுதத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான உதாரணத்தையும் உலகம் ஏற்கனவே பார்த்து விட்டது.
Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக ….சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு குறித்த இரத்தினக் கற்கள் கடத்திக் கொண்டுவரப்பட்டபோதே சுங்க அதிகாரிகளால்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Read more »

இலங்கை முஸ்லிம்களே, ஏமாந்து விடாதீர்கள்...!


MIU என்பது Musthafa International University என்பதாகும். இலங்கையில் உயர்கல்வி வழங்குகிறோம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று முஸ்லிம்கள் மத்தியில் ஷீஆ மாதத்தை இதுதான் உண்மையான இஸ்லாம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
Read more »

ஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்


பௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­னைகள் புரியும் போதே குள­று­ப­டி­களும் பிரச்­சி­னை­களும் எழு­கின்­றன. ஏழு, எட்டு வரு­டங்கள் சமயப் படிப்பு பெற்ற பின்­னரே பள்­ளி­வா­சல்­களில் சமயத் தலை­வர்கள் அமர்த்­தப்­ப­டு­கி­றார்கள்
Read more »

காங்­கே­ய­னோடை பள்­ளி­வா­சலின் அதிசிறந்த முன்மாதிரி, ஏனைய ஊர்களும் பின்பற்றுமா..?
போதைப் பொருள் பாவனை மற்றும் விற்­ப­னைக்கு எதி­ராக இலங்கை முஸ்லிம் அமைப்­புகள் தமது செயற்­பா­டு­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
Read more »

பணவெறி வைத்தியர்களினால், பச்சிலம் பாலகன் பறிபோனான்


சளித்தொல்லையால் அவதியுற்ற இரண்டு வயது குழந்தைக்கு துரிதமாகச் சிகிச்சை அளிக்காததால் அக்குழந்தை இறந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, கலஹா வைத்தியசாலை முன்பாக பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read more »

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியாவின் “பாரத ரத்னா” விருது ..முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் “பாரத ரத்னா” விருது வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Read more »

மர்ஹும் அஸ்வரின், முதலாவது நினைவுதினம்


இலங்கையின் அரசியலில் தனக்ெகன ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட ஏ.எச்.எம். அஸ்வர் மறைந்து இன்று -29.08.2018- ஓராண்டாகிறது.
Read more »

கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) காலை மிஹின் லங்கா விமான
சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆஜராகியுள்ளார்.
Read more »

மதுபோதையில் குழப்பம் விளைவித்தோருக்கு 5 ரூபா தண்டப் பணம்யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தனர்
என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மூவருக்கு தலா 5 ரூபா தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
Read more »

பாம் ஒயிலுக்கான இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது..


பாம் ஒயிலுக்கான இறக்குமதி வரி 20 ரூபாவால்அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதியாகும் பாம் ஒயில் ஒரு கிலோவிற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவினால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
Read more »

Tuesday, August 28, 2018

உயிரிழந்த கலைஞருக்கு, வாழ்த்து அனுப்பிய ரணில் - சீறிப் பாய்கிறார் மகள்


உயிரிழந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Read more »

பெண்கள் உடை மாற்றுவதையும், குளிப்பதையும் பார்த்தவர் மீது வாள்வெட்டுபெண்கள் நீராடுவதனையும் மாற்றுடையணிவதனையும் மறைந்திருந்து நீண்டகாலமாக பார்த்து வந்த இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read more »

Monday, August 27, 2018

கொழும்பை சுற்றி வளைக்க தயாராகும் மஹிந்த படை..!……..????

கொழும்பை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Read more »

பதுளையில் கோர விபத்து.


பதுளை அலுகொல்ல பகுதியில் இன்று காலை அரசு பயணிகள் பேருந்தொன்று கிட்டத்தட்ட 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read more »

Sunday, August 26, 2018

வெலிகம பிரதேசத்தில் புகையிரத நிலைய மற்றும் தபால் நிலைய பதாதைகள் தற்காலிகமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.


இந்திய திரைப்பட மற்றும் ஐரோப்பிய திரைப்பட இயக்குனர்களினால் தயாரிக்கப்படும் ஒரு திரைப்பட காட்சி வெலிகம பிரதேச புகையிரத நிலையத்தை மையமாக வைத்து படமாக்கப்படுகின்றது.
Read more »

Saturday, August 25, 2018

JANAZA NEWS பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக
புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்(வயது-64)   யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.
Read more »

Friday, August 24, 2018

இலஞ்சம் பெற முயன்ற அதி­காரி கைதுஅக்­க­ரைப்­பற்று பகு­தி­களின் வீதி­களை நிர்­மா­ணிக்கும் ஒப்­பந்­தங்­களை பெற்­றுக்­கொண்ட ஒரு­வ­ரிடம் அந்த ஒப்­பந்­தங்­க­ளுக்­கான நிதியை விரை­வாகப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக இலஞ்சம் பெற்­றுக்­கொண்ட அபி­வி­ருத்தி அதி­கா­ரி­யொ­ரு­வரை

Read more »

பெருநாள் அன்று தொழுதுவிட்டு, மது அருந்திய அசிங்கம் - ஒருவர் குத்திக்கொலை - 5 பேர் கைது


கிண்ணியா - மஹமாறு பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஐவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
Read more »

அசாம் அமீனுக்கு வெட்டு - பின்னணியில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு..?


பிபிசி சிங்கள சேவை சார்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்கவும் அரசியல் நேர்காணல்களை மேற்கொள்ளவும் அசாம் அமீனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Read more »

பெண்ணின் வயிற்றிலிருந்து, ஒன்றரை கிலோ முடி அகற்றம் - அஷ்ரப் வைத்தியசாலையில் விநோதம்


பெண்ணெருவரின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ கிராம் எடையுடைய முடி நவீன சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
Read more »

முஸ்லிம்களுக்கு எதிராக மைத்திரிபால..?மாகாண சபைகள் தேர்தலை, புதிய முறைமையின் கீழ் நடத்துவதற்குத் தேவையான தொகுதிகளைப் பிரிக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, நாளை -24- காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Read more »

A/L பரீட்சை எழுதும் மாணவியை, துஷ்பிரயோகம் செய்த இளம் அரசியல்வாதி


உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more »

யாழ்பாணத்தில் சிங்கள பாடசாலை விவகாரம் விபரம்..


யாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா
வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Read more »

ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க அனைத்து செயற்பாடுகளையும் செய்கிறோம். ஜனாதிபதியுடனும் பேசுவேன்.


கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை தொடர்பில்,தாம் ஜனாதிபதி
மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
Read more »

பல்கலைக்கழக நலனில் அக்கறையுள்ள அனைவரும் என்னுடன் இணைந்து செயற்பட முன் வாருங்கள்.


-எம்.வை.அமீர்-
பல்கலைக்கழக அபிவிருத்தியில் அக்கறைகொன்டதன் காரணமாகவே உபவேந்தர்
நியமனத்துக்காக பலர் முட்டி மோதியதாக தான் கருதுவதாகவும் அவ்வாறு அவர்கள் உண்மையாக பல்கலைக்கழகத்தின் நலனில்
Read more »

Thursday, August 23, 2018

மெல்ல மெல்ல மரணிக்கிறது மனிதம்எம்.எம்.ஏ.ஸமட்
எதிர்­வரும் 19ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை உலக மனி­த­நேய தினம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத்­த­ரு­ணத்தில், மனங்­களில் வறு­மைப்­பட்­டி­ருக்கும்

Read more »

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும்,
Read more »

கடிவாளமிடப்படாத பிசாசினால், A/L மாணவர்களுக்கு எற்பட்ட கொடுமை


சமூக வலைத்தளங்களும் இணையத் தளங்களும் புரிகின்ற தில்லுமுல்லுகளுக்கு எல்லையென்பது கிடையாது. இவற்றில் வெளிவருகின்ற தகவல்களையெல்லாம் மக்களில் பெரும்பாலானவர்கள் இப்போதெல்லாம் நம்புவது கிடையாது
Read more »

ஆற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர்வழங்கும் கிளை ஆறானா ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read more »

குறுஞ்செய்தி பிறருடைய தொ.பே. இலக்கத்தை தவறாக பயன்படுத்தும் செயலிக்கு தடை


பிறருடைய தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு அழைப்பு விடுக்கும் மற்றும் குறுந்தகவல் அனுப்பும் விசேட செயலி (எப்) பாவனையை நாட்டுக்குள் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக

Read more »

இனம், மதங்களை உடைத்தெறிந்த இஸ்லாம்... மதங்களை கடந்து மனங்களை வென்று நிற்கிறது.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

புரட்டி போட்ட கேரள மழையின் தாக்கம் இனம், மதங்களை கடந்து மனங்களை வென்று நிற்கிறது.

உதவி என்பது எந்த ரூபத்தில் வந்தால் என்ன, யார் மூலம் நடைபெற்றால் என்ன, எந்த வடிவத்தில்
Read more »

இன்றிரவு ரயிலுடன் மோதியதில் உடல் சிதறி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம்.


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர்
சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
Read more »

மக்கா ஹரம் ஷரீப் பிரதம இமாம் சவுதி அரேபியா அதிகாரிகளினால் கைது !!


மக்கா ஹரம் ஷரீப் பிரதான இமாம்களில் ஒருவர் சவுதி அரேபியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more »