ஒக்டோபர் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்புரயில்வே அனுமதிச் சீட்டுக்கான கட்டணத்தை 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே கட்டண அதிகரிப்பு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.