துருக்­கிக்கு 15 பில்­லியன் டொலர்களை வழங்குகிறது கட்டார்


கட்­டாரும் துருக்கி மத்­திய வங்­கியும் பணப் பரி­மாற்ற உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ளன. டோஹா, துருக்­கிக்கு 15 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­தவி வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்து பல நாட்கள் கடந்த பின்னர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கட்டார் மத்­திய வங்கி அவ்­வ­றி­வித்­தலை வெளி­யிட்­டது.


இரு மத்­திய வங்­கி­க­ளி­னதும் பணிப்­பா­ளர்­களால் கையொப்­ப­மி­டப்­பட்ட இவ்­வு­டன்­ப­டிக்கை இரு பக்க நாணயப் பரி­மாற்ற வழி­யினை ஏற்­ப­டுத்தும், இதன் மூலம் துருக்­கியின் நாணயம் பல­ம­டையும்.


ஆகஸ்ட் மாத ஆரம்­பத்­தி­லி­ருந்து அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ரான துருக்­கிய லீராவின் பெறு­மதி சுமார் 30 வீதம் வீழ்ச்­சி­ய­டைந்­தது. அமெ­ரிக்க மத­கு­ரு­வான அன்ரூ புருட்சன் துருக்­கியில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை அங்­கா­ராவின் வொஷிங்­ட­னு­ட­னான எதிர்­கால நட்­பு­ற­வினை சந்­தே­கத்­திற்­கி­ட­மாக்­கி­யுள்­ளது.


துருக்­கியில் நேரடி முத­லீ­டு­களை மேற்­கொள்­ளப்­போ­வ­தாக கட்டார் அறி­வித்­துள்­ள­மையை ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் வெளி­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சர் அன்வர் கர்காஷ் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கடு­மை­யாகச் சாடி­யி­ருந்தார்.


பரஸ்­பர ஒத்­து­ழைப்­பினை பலப்­ப­டுத்தும் நோக்கில் கட்டார் அமீர் 'பணி நிமித்­த­மான' விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு துருக்­கியை வந்­த­டைந்தார். பல்­வேறு துறை­க­ளிலும் இரு நாடு­க­ளுக்கும் இடை­யே­யான தற்­போ­துள்ள தந்­தி­ரோ­பாயப் பிணைப்­புக்­களை மேலும் விரி­வாக்­கு­வ­தற்­கான வழிவகைகள் மற்றும் இரு தரப்பு உற­வுகள் தொடர்பில் துருக்­கிய ஜனா­தி­பதி தையிப் அதுர்­கா­னுடன் ஷெய்க் தமீம் 'பிரத்­தி­யேக' சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டினார்.


இந்த சந்­திப்­பின்­போது துருக்­கிய நிதிச் சந்­தை­யிலும் வங்­கி­க­ளிலும் 15 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நேரடி முத­லீ­டு­களை மேற்­கொள்­ளப்­போ­வ­தாக கட்டார் உறு­தி­ய­ளித்­தாக துருக்­கிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.


அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக துருக்­கிய தேசிய நாண­ய­மான லீராவின் பெறு­மதி மிகக் குறைந்த பெறு­மதி நிலையில் பதி­வா­கி­யி­ருப்­ப­தி­லி­ருந்து மீள­வ­தற்கு இந்த அறி­விப்பு உதவும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கட்டார் முத­லீடு தொடர்பில் அறி­வித்த மறு நாள் லீராவின் பெறு­மதி நான்கு வீதத்தால் அதி­க­ரித்­தது.


துருக்­கிய இரா­ணுவத் தளத்­தி­னையும் துருக்­கியப் படை­யி­ன­ரையும் தனது மண்ணில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக கட்டார் வலுக்கட்டாயமாக முதலீடு செய்வதற்கான வாக்குறுதியை வழங்கியுள்ளதாக 'ஆய்வாளர்கள்' தெரிவித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவுக்கு நெருக்கமான ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.