18 வயது இளைஞன் வீட்டு வளாகத்தில் வைத்து யானை தாக்குத்தலுக்கு உள்ளாகி ஸ்தலத்திலே​யே பலி.


றாணமடு மாலையர்கட்டு கிராமத்தில், இன்று (31) அதிகாலை காட்டுயானை தாக்கி, 18 வயதுடைய,
சிவலிங்கம் லயனிதன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின், வீட்டு வளாகத்தில் வைத்தே, யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்ததால், பொதுமக்கள் பதறி ஓடியுள்ளனர் இதன்போது, குறித்த இளைஞன் நான்கு யானைகளுக்கு இடையில் சிக்கித் தவித்த போது, ஒரு யானை இளைஞனை தாக்கியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த இளைஞன், ஸ்தலத்திலே​யே உயிரிழந்துள்ளார் என, தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த, இளைஞனின் சடலம், மத்திய முகாம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லாவெளி பொலிசார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.