இன்றைய 22 பேர் உயிரிழப்புடன் கேரள பேரழிவால் இதுவரை 346 பேர் உயிரிழந்தனர்.


கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பருவமழை பெய்து மாநிலத்தையே
புரட்டிப் போட்டுள்ளது. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது.

மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.

கேரளாவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த பருவமழைக்கு நேற்று வரை 324 பேர் பலியானதாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றும் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் நிலச்சரிவினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வரை மட்டும் 22 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது.

முப்படையைச் சேர்ந்த வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்