மகிந்த ராஜபக்‌ஷவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றனர்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர்.

சுமார் 03 மணித்தியாலங்களின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.