முதலில் ஜனாதிபதி தேர்தல்.. அதன்பிறகு தான் மாகாண சபை தேர்தல். ( மொட்டு சின்­னத்­திற்கு எதி­ராக 56 வீத வாக்­குகள் விழுந்ததால் நாம் குழப்பம் அடையவில்லை)


(எம்.எம்.மின்ஹாஜ்)
ஜன­வ­ரிக்கு பின்னர் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அதி­காரம் உண்டு
. ஆகவே மாகாண சபை தேர்­த­லுக்கு முன்னர் ஜனா­தி­பதி தேர்தல் வரு­வ­தற்­கான சாத்தியம் உள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்த வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். எமக்­கென்று அர­சாங்­க­மொன்று அவ­சி­ய­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒருங்­கி­ணைப்பு குழு கூட்டம் கண்­டியில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. இ்ந்த கூட்­டத்தில் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், தொகுதி அமைப்­பா­ளர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கலந்து கொண்­டனர். இங்கு கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல மேலும் குறிப்­பி­டு­கையில்,

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் மொட்டு சின்னம் 44 சத­வீ­தத்தை பெற்­றுக்­கொண்­ட­தாக அக்­கட்­சி­யினர் கூறு­கின்­றனர்.

என்­றாலும் நாட­ளா­விய ரீதியில் மொட்டு சின்­னத்­திற்கு எதி­ராக 56 வீத வாக்­குகள் பதி­வா­கி­யுள்­ளன. இதனை நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். ஆகவே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் விவ­கா­ரத்தில் நாம் குழப்பம் அடைய தேவை­யில்லை.

அத்­துடன் அடுத்த ஜன­வ­ரிக்கு பின்னர் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அதி­காரம் உண்டு. ஆகவே மாகாண சபை தேர்­த­லுக்கு முன்னர் ஜனா­தி­பதி தேர்தல் வரு­வ­தற்­கான சாத்­தியம் உள்­ளது. இதன்­படி ஜனா­தி­பதி தேர்­த­லுக்கும் நாம் தயா­ராக வேண்­டி­யுள்­ளது. அதற்­காக ஏற்­பா­டு­களை கிராம மட்­டத்தில் தற்­போதே முன்­னெ­டுக்க வேண்டும்.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்த வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். எமக்­கென்று அர­சாங்­க­மொன்று அவ­சி­ய­மாகும். கிராம மக்­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கமே அவ­சி­ய­மாக உள்­ளது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு கிடைக்­க­பெற்ற வாக்கு வங்­கியில் 80 வீத­மா­னவை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உரித்­தா­ன­தாகும். ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருக்கு ஏதாவது செய்ய வேண்டுமாயின் எமக்கென்று அரசாங்கமொன்று அவசியமாகும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே அதற்காக எமது கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும் என்றார்.